பக்கம்:திரு. வி. க.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 147

தீண்டாமை ஒழிப்பு, சுதேசியம், அஞ்சாமையை அறிவுறுத்தும் ஒத்துழையாமை ஆகியவற்றில் நம்மவர்கள் நன்கு பழகிக் கொண்டால் ஒழிய சுயராச்சியம் பெறத் தகுதியுடைய வர்களாக மாட்டோம். இந்த ஆக்க வேலைகளைச் செய்ய முற்படாமல் வெள்ளையரைச் சுட்டு தள்ளுவதால் எவ்விதப் பயனும் ஏற்படாது என்ற கருத்துடையவர் நம் பெரியார். அன்றியும், வன்முறையால் பெறப்படும் ஒன்றும் வன்முறை களாலேயே அழிவுறும் என்றும் அவர் திடமாக நம்பினார். மகாத்மாவும் இதே கொள்கையைக் கடைப்பிடித்தார். ஆகவேதான், நம் பெரியார் வன்முறைகளைக் கையாண்டு விடுதலை பெற விரும்பவில்லை. இக்கருத்தைப் பெரியாரின் தமிழ்ச் சோலை என்ற நூலில் ‘அணித்தோ சேய்த்தோ என்ற கட்டுரையில் காணலாம் (பக்கம் 134)

வினைத்துய்மையுடையார்

திரு.வி.க.வின் அரசியற் கொள்கைகள் மகாத்மாவைப் பின்பற்றியதுடன் திருக்குறளையும் அடியொற்றி எழுந்தன. வள்ளுவப் பெருந்தகை வினைத்துய்மை என்றே ஓர் அதிகாரம் வகுத்துள்ளார் அல்லரோ? எத்தகைய செயலாயி னும் சரி, அதனைச் செய்து முடிக்க மேற்கொள்ளப்பெறும் வழிதுறைகளும் தூய்மையானவையாய் இருத்தல் வேண்டும் என வற்புறுத்தினார். இக் காலத்தில் எவ்வாறாயினும் தாம் விரும்பியதைப் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் தாம் நிரம்ப உள்ளனர். விரும்பியதைப் பெறுதற்குக் கையாளும் வழிதுறைகளைப்பற்றி அநேகர் கவலைப்படுவதே இல்லை. ஆனால், தவறான வழிகளில் பெறுபவை எவையாயினும் அவை அழிந்துவிடும் என்று தமிழ் மறை பேசுகிறது. முடிபு சிறந்திருப்பின் வழிதுறைகளைப் பற்றிய கவலை இல்லை’ Greirp 5(5:536) a circr’ End justfies the means’ grgrp மேனாட்டுக் கொள்கை இவண் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. அதுவும் அரசியலில் வழியைப் பற்றிக் கவலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/157&oldid=695447" இலிருந்து மீள்விக்கப்பட்டது