பக்கம்:திரு. வி. க.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 149

“இப் பெரிய இயக்கத்தைச் சட்ட வரம்பு கடந்த தென்று குறை கூறுவோர் இல்லாமற்போகவில்லை. சட்டவரம்பாவது மனித வாழ்விற்குரிய பல துறைகளுடன் ஒன்று. முதலில் அவ் வரம்பில் நின்று கிளர்ச்சி செய்தல் அறம். நியாயம் பிறந்தால் கிளர்ச்சி நிறுத்தப்படல் வேண்டும். நியாயம் பிறவாது, மேலும் மேலும் மறமும் தீமையும் கொடுமையும் மலியுமேல், சத்தியாக்கிரகப் போர் தொடங்குதலன்றி வேறு என் செய்வது? காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலும் மற்ற இடங்களிலும் போர் தொடங்குவதற்கு முன்னர் எத்துணை எத்துணை விண்ணப்பம் அதிகாரிகட்குச் செய்தனர்? எத்துணை முறை இங்கிலாந்து ஒடிக் குறைகளை முறையிட்டனர்? காந்தியடிகள் மாண் டேகு - செம்ஸ்பர்ட் முன்னிலையில் சான்று கூறி யதும், ஹண்டர் கூட்டம் முன்னிலையில் சான்று பகர்ந்ததும், பம்பாய் தில்லி இவ்விடங்களில் ஐரோப்பா யுத்தத்தைப் பற்றிக் கூடிய அரசாங்க மகா நாடுகளில் கலந்து கொண்டதும், போயர் சண்டையில் பிரிட்டிஷாருக்கு உதவி புரிந்ததும், ஐரோப்பாப் போருக்குக் (1914-1918) கெய்ரா ஜில்லாவில் சேனை திரட்டியதும், அமிர்தசரஸ் காங்கிரஸில் மாண்டேகு வுக்கு நன்றி கூறல் வேண்டுமென்று மன்றாடியதும் அவரது வாழ்வில் அரும்பிய செயல்களல்லவோ? மகாத்மா ஒத்துழையாமை துவங்குவதற்கு முன்னர், லார்ட் செம்ஸ்பர்டுக்கு விண்ணப்பஞ் செய்ததும், ஆங்கிலேயரை ‘அன்பார்ந்த நண்பரே என்று விளித்து இரு முறை கடிதம் விடுத்ததும், ஒத்துழையாக் காலத்தில் மாளவியா வேண்டுகோட்கிணங்கி லார்ட் ரீடிங்கைக் காண விரும்பியதும், மாளவியா மற்று மொரு முறை விழைந்தவண்ணம் ஸர் சங்கரன் நாயர் தலைமையின்கீழ் பம்பாயில் கூடிய மகாநாடு போந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/159&oldid=695449" இலிருந்து மீள்விக்கப்பட்டது