பக்கம்:திரு. வி. க.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 153

எடுக்கப் புகுந்த கதையாய் முடியும் எனக் கூறுகிறார். என்றாலும் இவர்கள் ஒருவேளை ஓர் அரசை நிர்மாணித்தாலும், அது புதிய உலகம் என்னும் பெயரால் அமையும் போலியாகவே இருக்கும் எனக் கூறுகிறார். இத்தகையோர் அமைக்கும் அரசுபற்றித் துறவு மனப்பான்மை யுடைய பெரியார் இதோ பேசுகிறார்: -

“இறைவனை உளங்கொள்ளாமலும் அவனடி யில் அடைக்கலம் புகாமலும் ஆணவத்தால் தருக்கிச் செருக்கித் திரியும் சிலர் கூடிப் புது உலகம் அமைக்கப் புகுவது இராவணன் கயிலாயமெடுக்கப் புகுந்த கதையாய் முடியும். ஆணவ எழுச்சியால் உண்மைப் புது உலகம் அமையுமா? அமைதல் அரிது. ஒருவேளை புது உலகம் என்னும் பெயரால் ஒரு போலி தலை காட்டலாம். அது மீண்டும் ஆலத்தால் எரிவதாகும். ஆணவத்தினின்றும் ஆணவ உலகமே தோன்றும்.

ஆணவ அரசியலார் நாடுகள் ஆண்டது போதும்: அவர் கூட்டங்கள் கூடியது போதும்; சட்டங்கள் கோலியது போதும்; திட்டங்கள் வகுத்தது போதும். உலகம் அலுத்துவிட்டது; இப்பொழுது அலமருகிறது; பட்டினியால் துடிக்கிறது; நோயால் வதைகிறது; மரணக் குவியலைக் காண்கிறது; விடுதலை, விடுதலை என்று வீறிடுகிறது. இனி உலகம் பொறாது. ஆணவ அரசியலர்! இறைவனை மறந்து இயற்கையை நீத்துச் செயற்கை ஆட்சி புரிந்தீர், அதனால் உலகம் துன்பக்கடலில் வீழலாயிற்று. இனி உம்மால் என் செய்தல் கூடும்? உமது கொட்டங் குலைக்க இயற்கை அன்னை முனைந்து நிற்கிறாள். அவள் முன்னே உமது ஆணவம் என் செய்யும்? இவ் வேளையில் உலகைப் புரட்சிக்கு- கொலைப் புரட்சிக்கு-இரத்தப் புரட்சிக்கு இரையாக்காதீர்;

| |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/163&oldid=695454" இலிருந்து மீள்விக்கப்பட்டது