பக்கம்:திரு. வி. க.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 இ. அ.ச. ஞானசம்பந்தன்

விலகுமின் ஒதுங்குமின்; ஆட்சியைச் சன்மார்க்கரிடம்

ஒப்புவித்து ஒதுங்குமின். யுத்த ஆலம் ஒடுங்கும்; புது

உலக அமுதம் எழும்.”*

மார்க்கிலத்தை ஆதரிக்கும் இப் பெரியார் உலகாயத வழி நின்று கண்ட அரசை வெறுக்கின்றார். சன்மார்க்கம் இல்லாத அரசியல் மக்கள் நல்வாழ்வுக்கு இடந்தாராது எனப் பேசுகிறார்:

“சமதர்மம் எற்றுக்கு? எல்லார்க்கும் பொதுவில் நடமிடுஞ் செம்பொருளை உணர்தற்கு என்று அறுதியிட்டுக் கூறலாம். அவ்வுணர்வுக்குப் பயன் படாத சமதர்மம் உலகாயதமாகும். இதுபற்றியே யான் சமதர்மத்தைச் சன்மார்க்முற்ற சமதர்மமென்றும், சன்மார்க்கமற்ற சமதர்மமென்றுஞ் சொல்வது வழக்கம். -

சன்மார்க்கமற்ற சமதர்மம் ஓரளவில் புற அமைதியைக் காப்பதாகும். வாழ்க்கைக்குப் புற அமைதி மட்டும் போதாது. அதற்கு அக அமைதியும் வேண்டும். அக அமைதிக்குச் சன்மார்க்கமுற்ற, சமதர்மம் தேவை.

இயற்கை விடுத்துச் செயற்கையிற் செல்லும் அரசுகளால் சமயத்தின் சொரூபமே குன்றியது. சமயத்தின் பெயரால் பல அட்டுழியங்கள் செறிந்தன. அச்செறிவு பொருட் பொதுமையரையும் வேறு சிலரையும் சமயத்தை வெறுத்து மறுக்கச் செய்தது. பொருட் பொதுமையால் அட்டுழியம் அகன்றதும் சமய சொரூபம் தானே மிளிர்வதாகும். இயற்கை, மனித வாழ்க்கையைப் பொருட் பொதுமையளவில் நிறுத்திவிடாது சமயத்தை வாழ்க்கையில் புணர்த்தியே

ஆலமும் அமுதமும், பக்கம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/164&oldid=695455" இலிருந்து மீள்விக்கப்பட்டது