பக்கம்:திரு. வி. க.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 155

தீரும். மனிதனை விளங்கினின்றும் பிரிப்பது சமயம், அத்தகைய சமயத்தை மனிதனும் விடமாட்டான்; சமயமும் அவனை விடாது.”* இத்தகைய ஓர் அரசியலைக் காணவே அவர் முயன்றார். கம்பநாடன் கவிதையிற் காணும்.

‘கள்வார் இலாமைப் பொருட்காவலும் இல்லை யாதும் கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ’

என்ற பாடலையும்

‘எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்த லாலே இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ’

என்ற பாடலையும் இந்தியாவும் விடுதலையும் என்ற நூலில் (பக்கம் 52) எடுத்துக்காட்டிவிட்டு, இதனைக் காவிய வருணனை என்று யாரும் இகழ வேண்டா, சந்திர குப்த மெளரியர் காலத்தில் வாழ்ந்த மெகஸ்தனிஸ் மக்கள் கதவுகளைப் பூட்டுவதில்லை என்று குறித்துள்ளதையும் எடுத்துக்காட்டுகிறார்.

எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தல் மார்க்கிலம். கள்வார் இலாதிருத்தல், அதாவது பொறாமை தானே திருட்டுக்கு அடிப்படை? அந்தப் பொறாமை இல்லாதிருப்பது காந்தியம். வயிற்றுப் பாட்டில் சமன்பாடு செய்வது மார்க்கிலம். மனப்பாங்கில் ஒருபாற்கோடாது சமன்பாடு எய்துவது காந்தியம். இவை இரண்டும் சேர்ந்ததே தமிழ் முனிவராம் திரு.வி.க. கண்ட அரசியல். -

“ ஆலமும் அமுதமும், பக்கம் 20,21.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/165&oldid=695456" இலிருந்து மீள்விக்கப்பட்டது