பக்கம்:திரு. வி. க.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 இ. அச. ஞானசம்பந்தன்

முகபாவம் முதலியனவும் பேசுபவர்களின் கருத்தை வெளியிடும் முறையை மாற்றிக்கொள்ளத் துரண்டு கிறது. ஒரே விஷயத்தைப் பல வகையாக வெளியிட லாம். கேட்பவர் முகங்களாகிய கண்ணாடியின் வழிக் கூறுபவர்களுடைய சொற்கள் எத்துணை அளவு உட்செல்கிறது என்பதைப் பேசுபவர் அறிய முடிகிறது. புரியவைக்கும் நோக்கம் தலைமை இடத்தைப் பெறுகிறதாகலின், பேச்சு நடையை மாற்றிக் கொண் டாவது கேட்பவர்க்குப் புரியவைக்கும் கடப் பாட்டைப் பேசுபவர் மேற்கொள்கிறார். ஆனால், எழுதுபவர்க்கு, இத் தொல்லை இல்லை. அவசரமாக ஒன்றைச் சொல்லவேண்டிய தேவை அல்லது சூழ்நிலை இல்லை. எழுத்தில் பெரும்பாலும் எழுத் தாளனுடைய தெளிவை ஒட்டி நடை தோன்றும். யாருக்காக இதனை எழுதுகிறோம் என்ற எண்ணம் ஒரளவு இந்த நடையை மாற்றியமைக்கத் துரண்டு கோலாயிருப்பதும் உண்டு. என்றாலும் எழுத்தாளன் நாளாவட்டத்தில் தனக்கென ஒரு நடையை அமைத்துக் கொள்கிறான். எவ்வளவு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவன் நினைத்தாலும் அந்த நடை அவனையும் அறியாமல் வந்துவிடும்.

எழுத்துநடை மாற்றம்

இவ்வாறு கூறுவதால் எழுத்தாளனுடைய நடையில் மாறுதலே இல்லையோ என்று நினைத்துவிட வேண்டா! எந்த எழுத்தாளனுடைய நடையிலும் மாறுதல் இருந்தே தீரும். அந்த மாறுதல் இரு வகைப்படும். ஒன்று சொல்லும் விஷயத்திற்கு ஏற்பக் காணப்பெறும் மாற்றம் இது மேலாகக் காணப்பெறும் மாற்றம். அடிப்படையில் வேறுபாடு ஒன்றும் இன்றேனும் சொற்களைப் பெய்யுமுறையிலும், சாதாரணச் சொற்கள், அதிகம் பழக்கத்தில் இல்லாத ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/168&oldid=695459" இலிருந்து மீள்விக்கப்பட்டது