பக்கம்:திரு. வி. க.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 159

தேவையான சொற்கள் என்பவற்றைத் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்துவதால் உண்டாகும். மேற்போக்கான மாறுபாடு முதல் வகையைச் சேர்ந்தது. இரண்டாவது நடை மாறுபாடு மிகவும். ஆழமான முறையில் அமைவது. இந்த மாறுபாடு எழுத்தாளனுடைய வளர்ச்சியை அல்லது தேய்வைக் காட்டுவது. எத்தகைய எழுத்தாளனுக்கும் இவ்வியல்பு பொதுவானது. ஷேக்ஸ்பியர் எந்த நாடகங்களை முதலில் எழுதினார். எவற்றைப் பின்னர் எழுதினார் என்ற ஆராய்ச்சியை இந்த நடை வேறுபாடு ஒன்றைக் கொண்டே முடிவு செய்கிறார்கள் எனின், இதன் வலுவை யாரும் மறுக்க முடியாது. எனவே, ஆசிரியனின் வளர்ச்சியை அவனுடைய நடை காட்டிவிடும் என்பது துணிவு.

இருவகை எழுத்தாளர்

திரு.வி.க. வெறும் எழுத்தாளரா? அன்றி இலக்கிய அடிப்படையில் விளைந்த எழுந்தாளரா? திரு.வி.க.வைப் பற்றிப் பேசும்போது இத்தகைய வினா பொருளற்றதும் தவறானதுமாக இருப்பினும் தற்கால எழுத்துவகை நோக்குகையில் இவ் வினா அத்துணைப் பொருளற்றது என்று யாரும் தள்ளிவிட முடியாது. இன்று தமிழுலகில் வாழும் எழுத்தாளருள் எத்துணைப் பேர் இலக்கியங் கற்ற எழுத்தாளர்? சராசரியாக இன்றையத் தமிழ் நாட்டில் நூறு எழுத்தாளரையும் மேலை நாடுகளில் ஏதாவதொன்றில் நூறு எழுத்தாளரையும் எடுத்துக்கொண்டு ஒப்புநோக்குவோம். அந் நாட்டில் காணப்பெறும் நூறு எழுத்தாளில் குறைந்த அளவு எழுபத்தைந்து பேராவது அவர்களுடைய பண்டை இலக்கியங் களைக் கற்றிருப்பர். ஏனைய இருபத்தைந்து பேர் தத்தம் நாட்டில் இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களை மட்டு மேனும் கற்றிருப்பர். அதிலும், தாம் எந்தத் துறையில் ஈடுபடு கின்றனரோ அத்துறை நூல்களை மிகுதியும் விரும்பிக் கற்றிருப்பர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/169&oldid=695460" இலிருந்து மீள்விக்கப்பட்டது