பக்கம்:திரு. வி. க.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 7

கடலாழங்காணும் சர்க்கரைப் பொம்மை

இராமலிங்க வள்ளலாரின் வலையிற் சிக்குண்ட (கதிரைவேலனாரின் மாணாக்கராகிய) திரு. வி.க. கடலின் ஆழங் காண முற்பட்ட சர்க்கரைப் பொம்மையாக ஆகி விட்டார். பொம்மை கடலில் கரைவது போலத் திரு. வி.க.வும் அருட்பாக் கடலில் தம்மை இழந்துவிட்டார். அதிலும் சிறப்பாக ஆறாந் திருமுறையில் முற்றிலும் ஈடுபட்டு விட்டார். கலியாணசுந்தரனார் என்ற அறிஞரின் தற்போதம் முழுவதையும் தன்னுள் கரைத்துக் கொண்டது ஆறாந் திருமுறை. அருட்பாக் கடலைக் கடைந்து அவர் எடுத்த அமுதமே இராமலிங்கர் திருவுள்ளம் என்ற நூலாகப் பரிணமித்தது. முத்துக் குளிப்பவர்

சமரசம் போதிக்கும் அருட்பாவைக் கற்ற பலர், அந்த உபதேசத்திற்கு முற்றிலும் விரோதமாக, மிகக் குறுகிய நோக்கமுடையவர்களாய், நால்வர் போன்ற FL!!! குரவர்களை மதிக்காத் அகங்காரமுடையவர்களாய் நிற்றலைக் காண்கிறோம். ஆனால், அறிஞர் திரு. வி.க.வோ அருட்பாக்கடலில் குளித்து அதனுள் சிறந்த முத்துகளை எடுத்தார். வள்ளலார் ஞானசம்பந்தரைக் குருவாகக் கொண்டிருந்தார் என்ற பேருண்மையை அறிந்து வெளியிட்டார். இதிலிருந்து விளங்கும் ஒரு பேருண்மையை நாம் மறந்து விடலாகாது. ஏனையோர் கண்டுங் காணாத பேருண்மைகளைக் காணும் ஆற்றல் பெற்றவர் திரு. வி.க. என்பது நன்கு விளங்கும்.

இருவகை எழுத்தாளர்

சமயப் பூசல் மிக்கிருந்த காலத்தில் அப் பூசலினிடையே தோன்றிய இவ்வறிஞர் அப் பூசல்களைக் கடந்து அப்பாற் சென்று சமரசம் காணும் பெரியாராக விளங்கினார். இதே போன்று மற்றத் துறைகளிலும் இவர் புதுமை வகுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/17&oldid=695461" இலிருந்து மீள்விக்கப்பட்டது