பக்கம்:திரு. வி. க.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 அ.ச. ஞானசம்பந்தன்

நம்முடைய பெரியார் இந்த இரண்டு வகைக் கல்வியையும் நிரம்பப்பெற்றார். மயிலை மகாவித்துவான் தணிகாசல முதலியாரிடம் தாம் பாடங்கேட்ட வரலாற்றை அவரே கூறியுள்ளது அறிய வேண்டுவது:

“அங்கே மயிலை மகாவித்வான் தணிகாசல முதலியார் வந்தார். அவர் என்னை நோக்கி, கதிரை வேற்பிள்ளை காலமான பின்னர் எவரிடத்தில் பாடங் கேட்டீர்? என்று வினவினார். அங்கிருந்த பால சுந்தர முதலியார் அன்று நிகழ்ந்ததை விளக்கிக் கூறினர். மயிலைக் கிழவர் வெகுண்டு, சூரியனார் கோயில் சாமியார் எற்றுக்கு? இந்தப் பாவியினிடம் வரலா காதா?’ என்று கூறினர், அக் கூவல் எய்ப்யினில் வைப்பாயிற்று ‘அதிர்ஷ்டம் பிறந்தது என்று எண்ணி, நாளை தங்கள் வீட்டுக்கு வருவேன்’ என்று பதிலிறுத்த வீடு சேர்ந்தேன். மகிழ்ச்சி பொங்கிய வண்ணமிருந்தது. அடுத்தநாள் தணிகாசல முதலியார் வீட்டுக்குப் போனேன்; அவரைக் கண்டேன்; வணக்கஞ் செய்தேன். என்னிடத்தில் படித்தலாகாது என்ற எண்ணமா என்று அவர் கேட்டார். கதிரைவேற் பிள்ளையின் பருவுடல் மறைந்த பின்னைத் தங்கள் நினைவே எனக்கு உற்றது. தங்களிடத்தில் அணுக முடியாதென்று கேள்விப்பட்டேன்; அதனால் தாங் களை யான் நாடவில்லை என்றேன். கிழவர், அப்படியா! என்னைக் கோபி என்று சிலர் சொல்வ துண்டு. சிற்றிலக்கணமும் பயிலாது சித்தாந்த சாத்திரங் கேட்க வருவோரைக் கண்டதும் கோபம் பிறவாது என்ன பிறக்கும்? உம்மையுஞ் சோதனை செய்து, நிலைமையுணர்ந்து, எங்கிருந்து பாடந் தொடங்க வேண்டுமோ அங்கிருந்தே தொடங்குவேன், எவரை யும் திடீரென மேலே பறக்க யான் விடமாட்டேன்’ என்றார்; பின்னே தாம் ஆறுமுக நாவலர்பால் தமிழ் பயின்ற விதங்களையெல்லாம் எடுத்துக் கூறி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/172&oldid=695464" இலிருந்து மீள்விக்கப்பட்டது