பக்கம்:திரு. வி. க.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ 163

நன்னூலில் சில கேள்விகள் கேட்கப் புகுந்தார். எனக்குத் தெரிந்த அளவில் பதில் விடுத்தேன். திருவிளையாடல் நாட்டுப் படலத்தில் சில பாக்கட்கு உரை கேட்டார். உரை சொன்னேன். இலக்கிய இலக்கணங்களை யான் முறையாகப் பயில வேண்டுவ தில்லை என்றும், அவ்வப்போது ஆங்காங்கே உறும் ஐயப்பாடுகளைக் கேட்டுத் தெளிந்து கொள்வது நலன் என்றும், சாத்திரம் முறையாகப் பயிலுதல் வேண்டும் என்றும். இப்பொழுது திருவருட்பயன் தொடங்குதல் நலம்’ என்றும் வாய்மலர்ந்தார்.”* இதன் சிறப்பு

இதிலிருந்து பெறப்படுவது ஒன்றுண்டு. அக்கால நிலையில் முறையாகத் தமிழ் பயிலுவதற்கு இம்முறை கையாளப் பெற்றது என்பதேயாம். ஆனால், திரு.வி.க.வைப் போன்று கூர்மையும் துண்மையும் பொருந்திய இயற்கை. அறிவுடையாரை வீணாக எல்லாவற்றையும் படிக்கச் சொல்லும் பழக்கமும் இல்லை என்று தெரிகிறது. இந்த முறையில் பல்வேறு பெரியார்களிடம் முறையாகத் தமிழ்க் கல்வி பயின்றமையின், சிலர் அஞ்சுவதுபோலப் பரந்த நோக்கம் இல்லாமற் போய்விடவில்லை நம் பெரியாருக்கு. இன்னுங் கூறப்போனால் தற்காலத்தில் பலரைப் பற்றியது போல ஒருபாற்கோடிய பேதைமை இப் பெரியாரைத் தீண்டவில்லை. தமிழ் அன்புக்குப் பதிலாக வெறி கொண்டு அலையவும் இல்லை; தமிழை ஒதுக்கி ஆங்கில மோகம் கொண்டு அலையவுமில்லை. .

இவர் தனித்தன்மை .

- இத்துணை ஆசிரியர்களிடம் கற்றும் கேட்டும் பயின்ற நம் பெரியார் பலரும் செய்யாத ஒன்றையும் செய்தார்.

வாழ்க்கைக் குறிப்புகள், பக்கம் 99, 100.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/173&oldid=695465" இலிருந்து மீள்விக்கப்பட்டது