பக்கம்:திரு. வி. க.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 165

உண்டாக்குவதில்லை. வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே நின்று விடுகிறது. இயற்கை உலகே தொல்காப்பியமாகத் தோன்றுகிறது. அகிலம் ஒரு பெருங் கழகமாகக் காணப் படுகிறது (பக்கம் 19) என்று அவரே குறிக்கிறார். இயற்கைப் பள்ளியில்

இத்தகைய மன விரிவைப் பெறுவதுதான் புலமையே தவிரச் சொல்லதிகாரத்தை எழுத்தெண்ணிப் படித்தேன் என்று இறுமாந்து திரிவது புலமையன்று; புல்லறிவாண் மையே. வேண்டுமானபொழுது எடுத்துப் பார்த்துக் கொள் வதற்குத் தொல்காப்பியச் சொல்லதிகாரப் பிரதிகள் கிடைக்கும் இற்றை நாளில் எழுத்தெண்ணிப் படித்ததாகக் கூறுவது வியப்பே! ஆனால், இவ்வாறு படித்ததாகக் கூறுபவர்கள் அதிற் கூறப்பெற்றதை விளங்கிக் கொண்டார் களா என்றால் அதுதான் ஐயத்திற்குரியது. திரு.வி.க. அவர்கள் இயற்கைப் பள்ளியில் பயின்ற வரலாற்றை இதோ கூறுகிறார்: “ஞாயிற்றை நோக்குகிறேன். ஐயங்கள் எழுகின்றன. அவற்றை எப்படிக் களைந்து கொள்வது? ஞாயிற்றையே நோக்கி, ஞாயிற்றே! நீ எழுவதும் மறைவதும் உண்மையா? காலையிலும் மாலையிலுஞ் சிவந்தகோலம் தாங்குவதென்னை? மற்ற வேளைகளில் வேறு கோலம் தாங்குவதென்னை ? உன்னிடத்தில் ஏழு நிறம் அமைவானேன்? எட்டு ஏன் அமையவில்லை? நீ எற்றுக்கு ஒளி கால்கிறாய்? ஒளி உன்னுடையதா? பிறருடையதா? என்றே கேட்பேன். எளிதில் விடைகள் கிடைப்பதில்லை. ஞாயிற்றை உன்னி உன்னி அதில் மூழ்கி ஒன்றுவேன்; விடைகள் கிடைக்கும்.” தாமே தமக்கு ஆசிரியர்

இந்தச் சிறிய பத்தியில் அவருடைய அறிவின்

வளர்ச்சியை அறிய முடிகிறது. ஞாயிற்றே! எழுவதும் மறைவதும் உண்மையா? காலையிலும் மாலையிலும் சிவந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/175&oldid=695467" இலிருந்து மீள்விக்கப்பட்டது