பக்கம்:திரு. வி. க.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 167

அடைந்தமை குறித்து மகிழ்வெய்துகிறேன். அதைக் கூட்டியது எதுவோ அதை வாழ்த்துகிறேன்; வணங்கு கிறேன்.

தமிழ் நெறி என்பதைத் தமிழர்க்குரிய-தமிழ் நாட்டுக்குரிய நெறி என்று யான் கொள்கிறேனில்லை. அதை யான் பொதுநெறியாக-அறமாக- அந்தண் மையாகவே கொள்கிறேன்.

தமிழ் நாகரிகம் மிகவுந் தொன்மை வாய்ந்தது: அந் நாகரிகம் பண்பட்டது; தனது நிலைமையில் முழுமை எய்தியது. பண்பட்ட நாகரிகத்தின் அறிகுறி என்ன? அந்தண்மையே. அந்தண்மையற்ற நாகரிகம் நாகரிகமாகாது. திருவள்ளுவர் நாகரிகம் என்ற சொல்லைக் கண்ணோட்டத்தில் பெய்திருப்பது கருதற் பாலது. பெயக்கண்டு நஞ்சுண்டமைவர் நயத்தக்கநாகரிகம் வேண்டுபவர் என வரூஉம் அவர்தம் வாய்மொழியை உற்று நோக்க நோக்க நாகரிகத்தின் இயல் இனிது விளங்கும். முதிர்ந்த பண்பட்ட நாகரிகத் தினின்றும் பொதுமை அறமே முகிழ்க்கும். பொது மையே நாகரிகத்தின் அறிகுறி.

நாகரிகத்திற் சிறந்த பழந்தமிழ் அறிஞர் தாங்கண்ட பொதுமையைத் தமது தாய் மொழியில் வெளியிட்டனர். பொதுமை அறமாகிய அந்தண்மை தமிழ்மொழி வாயிலாக வெளிவந்தமையால் அதைத் தமிழர்க்க்ே உரியதென்றும், தமிழ் நாட்டுக்கே உரியதென்றுங் கொள்வது அறமாகாது. • .

இயற்கைத் தெய்வப் புலவர் யாண்டில்லை: எங்கும் இருக்கின்றனர். அவர்தம் உணர்வில் பொதுமை செறிவது இயல்பு. அவர் அவர், தாம் தாம் கண்ட பொதுமையைத் தம் தம் மொழியிலே இறக்குகின்றனர். அதனால் அவரவர் கண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/177&oldid=695469" இலிருந்து மீள்விக்கப்பட்டது