பக்கம்:திரு. வி. க.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 இ. அ.ச. ஞானசம்பந்தன்

பொதுமை அவரவர் மொழி வழங்கும் நாடுகளுக்கே உரியதென்று கொள்வது பொதுமையைச் சிறைப் படுத்துவதாகும்.

திருவள்ளுவர் கொள்கை அவரது தாய்மொழி வாயிலாக வெளிவந்தது. அதனால் அவர் கொள்கை தமிழ்நாட்டவர்க்கே உரியது என்று சொல்வது நியாயமாகுமா? ஷெல்லியின் கருத்தை இங்கிலீஷ் நாட்டளவில் கட்டுதல் முறையாகுமா?

அணித்தே ஒரு நூலுக்கு யான் அணிந்துரை புனைந்தேன். அந்நூல் யான் பெற்ற இன்பம் என்பது. அது தமிழறிஞர் மு. அருணாசலனாரால் யாக்கப் பட்டது அவ்வணிந்துரையை,

‘தமிழர் எது? மொழியா? அன்று நாடா அன்று; பின்னை எது? வாழ்க்கை. தமிழ் வாழ்க்கை இயற்கை யோடியைந்து ஒழுகுவது.

இயற்கையோடியைந்த ஒழுகுவோர் எவராயினு மாக அவர் தமிழ் வாழ்க்கையினரே ஆவர். திருவள்ளுவர், ஷெல்லி, தாகூர் முதலியோர் தமிழ் வாழ்க்கையினர் என்று கூறல் மிகையாகாது:

என்று தோற்றுவாய் செய்துள்ளேன். ஆகவே, எனது தமிழ் நெறி, “யாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற கொள்கை யுடையது. அதுவே, பொதுமை-அறம்அந்தண்மை-இயற்கை நெறி. இப் பொருளுக்கு எம்மொழிப் போர்வை யிட்டால் என்ன?

இயற்கை நெறியில் நின்றொழுகல் வேண்டு மென்று யான் வலிந்து முயன்றதே இல்லை. அதுதானே படிப்படியே கூடிவருகிறது. இயற்கைநெறி, ஒழுக்க வாழ்க்கையாகும். அவ் வாழ்க்கை அமைதிப் பெண்ணை மணஞ் செய்விக்கும். அம் மணம் குழந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/178&oldid=695470" இலிருந்து மீள்விக்கப்பட்டது