பக்கம்:திரு. வி. க.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 : அச. ஞானசம்பந்தன்

உரைநடையின் போக்கு

அதற்கு முன்னர்த் தோன்றிய தமிழ் இலக்கிய உரையாசிரியர்கள் அனைவரும் கவிதை முறையிலேயே உரைநடையையும் எழுதிச் சென்றனர். சாதாரண மனிதனுடைய பேச்சு வழக்கில் உரைநடை அமைய வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மனத்தில் தோன்றவே இல்லை. சென்ற நூற்றாண்டின் இறுதியில் நீளமாக உரைநடை எழுதிய வள்ளலார்தாம் ஓரளவு சாதாரண மனிதனை மனத்துட்கொண்டு எழுதினார். பின்னர்ப் புதினங்கள், சிறுகதைகள் எழுதுபவர்களால்தான் உரைநடை வலுப்பெற்றது என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்நிலையில் உரைநடையாளரிடம் இரண்டு பிரிவுகள் தோன்றின. வடமொழியைத் தாராளமாகக் கலந்து எழுதுவோர் ஒருபுறம்: தனித்தமிழிலேயே எழுதுவோர் ஒருபுறம். இந்த இரு கட்சியினரிடையேயும் அதீதவாதிகள் உண்டு. தமிழையும் வடமொழியையும் சரிக்குச் சரி கலப்பவர்களிலிருந்து வழக்கிலுள்ள சொற்களை மட்டும் பயன்படுத்துபவர்கள் வரை அந்தக் கட்சியில் உண்டு; எந்தச் சொல்லையும் தமிழ் என்று சாதிப்பவர்களிலிருந்து அனைவருக்கும் புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதுபவர்வரை இந்தக் கட்சியிலும் உண்டு. ஆனால், பெரும்பாலான உரைநடை யாளர் ஒன்றை மறந்தே விட்டிருந்தனர். அதுதான் தாம் ஏன் எழுதுகிறோம் என்ற வினாவிற்கு விடையாகும். தம்முடைய புலமையை உரைநடை மூலம் வெளிப்படுத்த முயன்றன ரேயன்றிப் படிப்பவர்கட்கு அது பயன்பட வேண்டும் என்ற நோக்கம் இருந்ததாகக் கூறமுடியவில்லை. படிப்பவர்களும், இது புரியவில்லை என்று கூறினால் எங்கே தம்மைக் கல்வியிற் குறைந்தவர் என்று கருதிவிடுவார்களோ என்ற அச்சத்தால் புரியாவிடினும் புரிந்ததாகவே நடித்தனர். சென்ற நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த வள்ளலாருடைய உரைநடையில் ஓர் எளிமையைக் காண முடியும். மிக உயர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/182&oldid=695475" இலிருந்து மீள்விக்கப்பட்டது