பக்கம்:திரு. வி. க.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 173

தத்துவக் கருத்துகளைக் கூட அவர் மிக எளிய நடையில் எழுதினார். சாகா நிலைபற்றிய அவருடைய குறிப்புகளி லிருந்து ஒரு பத்தியைத் தருகிறேன்;

“இத் தேகத்தை நித்திய தேகமாக்கி எக் காலத்துமழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனாற் பெறுதல் கூடுமென்று அறியத் தொடங்கிய தருணத்து வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது. எல்லாமுடைய கடவுளது திருவருட் சுதந்திரமொன்றாலே பெறுதல் கூடும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடியறிந்தேன். பின்னர்த் திருவருட் சுதந்திரம் நமக்கு எந்த வழியாற் கிடைக்கு பெ ன்று அறியத் தொடங்கிய தருணத்து எனது யானென்னும் தேகசுதந்திரம், போகசுதந்திரம், ஜீவ சுதந்திரம் என்னும் மூவகைச் சுதந்திரங்களும் நீங்கிய விடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன். ஆகலின் எனது சுதந்திரமாகக் கொண்டிருந்த தேகசுதந்திரத்தையும், போகசுதந்திரத்தையும், ஜீவசுதந்திரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்திரமாகக் கொடுத்துவிட்டேன். கொடுத்த தருணத்தே இத் தேகமும், ஜீவனும், போகப் பொருள்களும் சர்வசுதந்திரராகிய கடவுள் பெருங் கருணையாற் கொடுக்கப்பெற்றனவன்றி, நமது சுதந் திரத்தாற் பெற்றனவல்ல வென்னும் உண்மையை அருளாலறிவிக்கவும் அறிந்துகொண்டேன். இனி இத்தேகத்தினிடத்தும், ஜீவனிடத்தும், போகப் பொருள் களிடத்தும் தேவரீர் திருவருட் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்திரத் தோற்றமும் தோற்றமாட்டாது. தேவரீர் திருவருட் சுதந்திரத்தை என்னிடத்தே வைத்தருளி, மரணம், பிணி, முப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகளெல்லாவற்றையும் தவிர்த்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/183&oldid=695476" இலிருந்து மீள்விக்கப்பட்டது