பக்கம்:திரு. வி. க.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 இ. அ.ச. ஞானசம்பந்தன்

பிறமொழிக் கலப்பு

தமிழில் என்றோ ஒரு காலத்தில் வந்து வழங்கிப் பழகிப்போன சில வடசொற்களும் உண்டு. பிற மொழிச் சொற்கள் தமிழில் வந்து வழங்குவதைத் தடுத்தல் இயலாது என்பதை அறிந்திருந்தனர் நம் முன்னோர். எனவேதான், வடமொழிச் சொற்கள் தமிழில் வந்து வழங்குதற்கு விரிவான முறையில் இலக்கணம் வகுத்திருந்தார்கள். ஆசிரியர் தொல்காப்பியனார் அச் சொற்கள் தமிழில் வரவேண்டு மாயின் அவற்றின் வரிவடிவத்தை விட்டுவிட்டுத் தமிழ் வரிவடிவந் தாங்க வேண்டுமென்ற கருத்தில் வட சொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ (தொல்-சொல்-40) என்று கூறிப் போனார்.

கலப்பு முறை -

மேல்நாடு செல்லும் தமிழன் ஒருவன் மேனாட்டுப் பெண் ஒருத்தியைக் காதலித்து மணந்துகொள்ள நேரிட்டால் அதில் தவறு இல்லை. ஆனால், ஏற்கெனவே அவன் மணமானவனாகவும் தன்னுடைய மனைவியை இந்நாட்டில் விட்டுச் சென்றவனாகவும் இருந்தால் இவள் இங்கிருக்க மற்றொரு பெண்ணை மணத்தல் தவறு. ஆனால் முன்னரே மணமாகாதவனாக இருப்பின் இப் புது மணத்தால் தவறில்லை. என்றாலும், மேனாட்டுப் பெண்ணை மணந்த வன் அவளைத் தமிழ் நாட்டிற்கு அழைத்துவந்து தமிழ ரிடையே குடும்பம் நடத்த விரும்பினால் மறவாமல் முதலில் செய்யவேண்டியதொன்று உண்டு. அவள் அணிந்திருக்கும் மேனாட்டு உடையாகிய கெளனை நீக்கிப் புடைவை கட்டுமாறு செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் அவளும் இந்த மக்களிடையே கூச்சமின்றி வாழமுடியும்.

இந்த உதாரணத்தைக்கொண்டே பிறமொழிக் கலப்புப் பற்றிய ஆராய்ச்சியை நடத்தலாம். நம்மிடம் ஏற்கெனவே ஒரு சொல் இருக்கும்பொழுது அதே பொருளுடைய பிறமொழிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/186&oldid=695479" இலிருந்து மீள்விக்கப்பட்டது