பக்கம்:திரு. வி. க.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 177

சொல்லைக் கடன் வாங்குவது மனைவி இருக்கையில் வேறு

ஒரு பெண்ணைக் கைப்பிடிப்பது போலாகும். அறிந்தோ அறியாமலோ முறை. முறைகேடு பாராமல் ஒருவர் இரு

மணங்கள் செய்துகொண்டிருப்பின், அந்த இருவரும்

ஓரிடத்தில் இருந்து பழகிவிட்டபின் திடீரென்று ஒருத்தியைத்

தள்ளிவிடுவதும் சரியன்று. அதேபோன்று இந்நாட்டிடைப்

பல காலமாக வழங்கிவிட்ட சொல்லை இன்று நீக்க

வேண்டும் என்று நினைப்பதும் சரியாகத் தோன்றவில்லை. இறக்குமதி செய்வதற்கு முன்னரே ஆராய்வதைவிட்டு

இறக்குமதியானபின் ஆய்தலும் தள்ளிவைக்க முற்படுதலும்

சரியன்று. எவ்வாறாயினும், வாஸனை’, ‘தாஸி, ப்ரஸ்ாதம்’, “வாத்யங்கள் என்று வடமொழி உச்சரிப்புடனும் அந்த

எழுத்துகளுடனும் எழுதத் தேவை இல்லை; எழுதினால் அது மேனாட்டுப் பெண் கெளனுடன் தமிழ்நாட்டில் வாழ்வது

போலாகும்; தவறுமாகும். கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன்

போன்றவர்களும் இதனால் விளையும் தீமையை உணர்ந்து, இலக்குவ! நீ கலக்குவன் என்று கருதினால் என்றே

பாடிச்செல்கிறான். ‘லக்ஷ்மணன் என்று கம்பன் யாண்டும் பயன்

படுத்தவே இல்லை.

வடமொழிக்குப் பதிலாக

இற்றை நாள் தமிழ் உரைநடையில் வடமொழி அதிகம் இடம் பெறவில்லை என்பது உண்மைதான். ஆனால், அதே இடத்தை ஆங்கிலம் பெற்றுவிடுகிறது. சங்கத்தின் தற்காலத்து மெம்பர்கள் அல்லது மாஜி மெம்பர்கள் என்று எழுதுப வர்களும் சில காலம்வரை இருந்தனர். இக்காலத்தில் இந்த இரண்டு முறைகளும் ஓரளவு குறைந்துள்ளன என்றாலும், கொச்சைச் சொற்களைப் புகுத்தி எழுதுதல் பெரு வழக்காயிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தார், தஞ்சையார், செங்கற்பட்டார் ஆகியவர்கள் தத்தம் மாவட் டங்களில் வழங்கும் வழக்காறுகளை அப்படியே எழுதத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/187&oldid=695480" இலிருந்து மீள்விக்கப்பட்டது