பக்கம்:திரு. வி. க.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 179

டிற்கொரு முறை காளி கோயிலையடைந்து அரசன் நலத்தைக் கோரிப் பலவகைப் பூசை புரிவார்கள். அது காலை, அவருள் ஒரு சிலர் தங் கரத்தில் அரிவாள் தாங்கிக் காளியின் திருமுன்னின்று எமது வேந்தன் நீண்ட காலம் உலகத்தில் வாழ்ந்து குடிகளுக்கு நன்மை செய்ய எமது வாழ்நாளைக் குறைத்துக் கொள்கிறோம்’ என்று கூறித் தங்கள் கழுத்தைத் தாங்களே அறுத்துக் காளிக்குப் பலியாவர். இவர், தம் வாழ்நாளைக் குறைத்துக்கொள்வதனால், அவ் வாழ்நாள் அரசன் வாழ்நாளோடு கலந்து அவனை நீண்ட நாள் வாழச் செய்யும் என்னுங் கருத்துக் கொண்டிருந்தனர் போலும். இவர் செயல் சிலருக்கு அநாகரிகம் போலத் தோன்றும், ஈண்டு நாம் அவர்தம் உட்கருத்தையே கவனித்தல் வேண்டும். அரசனுக்காகத் தம் உயிரையும் போக்கிக் கொள்ளும் இராஜ பக்தர்கள் வாழ்ந்த திருநாடு நம் இந்திய நாடு. அப் பெரியோர் பரம் பரையில் வந்தவர்கள் இந்தியர்கள் என்பது கவனிக்கத் தக்கது. - -

இராஜபக்தி சிறக்கச் சிறக்க நாட்டிற்கு நன்மையும் நாகரிகமும் பெருகும். முன்னர்ச் சமய சம்பந்தமான பிரசங்கஞ் செய்வோர் கடவுள் வாழ்த்துக் கூறிப் பிரசங்கத்தைத் தொடங்குவது வழக்கம். இப்பொழுது சில உபந்நியாசகர்கள் கடவுள் வாழ்த்துக்குப் பின் அரச வாழ்த்துக் கூறித் தம் உபந்நியாசத்தைத் தொடங்குகின்றனர். எல்லா வழியிலும் நாளுக்கு நாள் இந்தியாவில் இராஜபக்தி பெருகாநிற்கின்றது. இராஜ பக்தியில்லாதவர்கள் தேசபக்தியில்லாதவர்களென்பது எமது கொள்கை”.

தேசபக்தாமிர்தம், பக்கம் 4, 5, 6 (7-12-1917).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/189&oldid=695482" இலிருந்து மீள்விக்கப்பட்டது