பக்கம்:திரு. வி. க.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 இ. அச. ஞானசம்பந்தன்

“உலகத்துக்கும் கஷ்டம் நேரிடும்போது அக் கஷ்டம் தொழிலாளரையே பெரிதும் பாதிக்கிறது. ஆனதுபற்றித் தொழிலாளரே தெய்வ வழிபாட்டில் தலைசிறந்து விளங்கவேண்டியவராயிருக்கின்றனர்.

தொழிலாளர்களே! உங்கள் நிலையை நினைக்க நினைக்க மனம் உருகுகிறது. கஷ்டத்தையேற்றுக் கொள்ளச் சித்தமாயிருங்கள்; அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிந்தே நடவுங்கள்; ஒற்றுமையைக் கைவிடாதே யுங்கள்; கடவுளை மறவாதேயுங்கள்; பிரகலாதன் கஷ்டத்தை நினைத்துக் கொள்ளுங்கள்; சீதையின் வருத்தத்தைக் கருதுங்ககள்; பாண்டவர் வனவாசத்தை மறவாதேயுங்கள்; தெய்வ வழிபாட்டைச் செய்து கொண்டேயிருங்கள்; உங்கள் எண்ணம் நிறைவேறும்.”*

இப்பகுதி யாருடைய எழுத்து என்று நினைக்கின்றீர்கள்? திரு.வி.க.வினுடையதேதான். 1917, 1918ஆம் ஆண்டுகளில் தேசபக்தன் பத்திரிகையில் அவர்கள் எழுதிய நடையாகும் இது. இதில் காணப்பெறும் நடைக்கும் ‘உள்ளொளி போன்ற பிற்காலத்தில் எழுதிய நூல்களிற் காணப்பெறும் நடைக்கும் கடலனைய வேற்றுமை உண்டு. நடையில் மட்டுமல்லாமல் கருத்திலுங்கூடக் கடலனைய வேறுபாட்டைக் காணலாம். இராஜபக்தி சிறக்கச் சிறக்க நாட்டிற்கு நன்மையும் நாகரிகமும் பெருகும். இப்பொழுது சில உபந்நியாசகர்கள் கடவுள் வாழ்த்துக்குப்பின் அரச வாழ்த்துக் கூறித் தம் உபந்நியாசத்தைத் தொடங்குகின்றனர். எல்லா வழியிலும் நாளுக்கு நாள் இந்தியாவில் இராஜபக்தி பெருகா நிற்கின்றது; இராஜபக்தி இல்லாதவர்கள் தேசபக்தி இல்லாதவர்கள் என்பது பொதுக்கொள்கை’ என்ற தொடர்கள் 7-12-1919இல் தமிழ்ப் பெரியாரால் தேசபக்தன் தலையங்கத்தில் எழுதப் பெற்றன.

தேசபக்தாமிர்தம், பக்கம் 39 (29-10-1918).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/190&oldid=695484" இலிருந்து மீள்விக்கப்பட்டது