பக்கம்:திரு. வி. க.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 அச. ஞானசம்பந்தன்

கட்புலனிலும் ஊடுருவிப் பாயுங் காலத்து உண்டாகும். விதிர் வியர்ப்பு, மயிர் சிலிர்த்தல் முதலிய நிகழ்ச்சி களாலும் மெய்க்கும் இன்பமுண்டாகிறது எனவே, ஐம்புலனுக்கும் இன்பம் ஊட்டக் கூடிய பொருள் வடிவாகத் தேவாலயங்கள் அமைக்கப்பட்டிருக் கின்றன என்பதை உணரல் வேண்டும். (28-6-1918)

‘இப்பொழுது பெரும்பாலும் ஆலயங்களைப் பற்றிய வழக்குகள் நியாய ஸ்தலத்துக்குச் செல்கின்றன. வழக்குக் காரணம் அசத்தியமும் அயோக்கியத் தன்மையுமேயாகும்.’

ஆலய காரியங்களுக்குச் செலவழிந்த பொருள் போக, மிகுதியாக உள்ள பொருளைத் தேச முன்னேற்றத்துக்குரிய வழிகளிற் செலவழிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் (1-7-1918) இருவகை நடைகள்

1918ஆம் ஆண்டு முடிய இந்த முறையில் இருந்த திரு.வி.க. அவர்களின் நடை 1919இல் திடீரென்று மாறுத லடையக் காண்கிறோம். அவர் வாணாள் முழுதும் மணம் பரப்பப்போகும் திரு.வி.க.வின் புரட்சி நடை 1919இல் அரும்பத் தொடங்கிவிட்டது. ரெளலட் சட்டத்தை எதிர்த்து இதோ எழுதுகிறார்: - . “பாரத மாதாவின் பொன்மேனியைக் கருமேனி யாக்கவல்ல இருட்டு மசோதா சட்டமாகிவிட்டது. அதிகாரவர்க்கத்தார், உலக நிலையும், இந்தியாவின் நிலையையும் ஆய்ந்தோய்ந்து பார்க்க அவகாசமின்றி மிக விரைவாகக் கொடிய சட்டத்தை நிறைவேற்றி விட்டனர். இந்தியாவிலுள்ள எல்லாக் கட்சியினரும் அச் சட்டத்தை வெறுக்கின்றனர்; மறுக்கின்றனர்: ஆனால் அச் சட்டத்தை ஒழிக்க வேண்டிய முறைப்பாடுகளில் சிறிது மாறுபடுகின்றனர். எல்லாக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/192&oldid=695486" இலிருந்து மீள்விக்கப்பட்டது