பக்கம்:திரு. வி. க.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 அச. ஞானசம்பந்தன்

முன்னர் சாதாரணப் பத்திரிகையாசிரியர் ஒருவர். அதுவும் பத்திரிகை தொடங்கிய சின்னாட்களுள் இவ்வளவு துணிந்து அன்றைய பெரிய மனிதர்களை எதிர்த்து எழுதவேண்டு மாயின் அவர்க்கு எத்துணை நெஞ்சு உரம் இருந்திருக்க வேண்டும் என்பது சிந்தித்தற்குரியது.

நம் குறைகாணல்

தமிழைக் குறை கூறுவோரை இத்துணை வீறு கொண்டு சாடிய அறிஞர் தமிழ்ப் புலவர்களிடை உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை. அவர்தம் நிலை உயர என்ன என்ன செய்யவேண்டும் என்பதையும் நிரல்படக் கூறுகின்றார்:

“தமிழ் வளர்ச்சிக்காக இதுகாறும் எத்துணை மகாநாடுகள் கூடியிருக்கின்றன? எத்துணைத் தீர்மானங்கள் அரசாங்கத்தாருக்கு அனுப்பப்பட்டன: தமிழ்ப் பண்டிதர்கள் சம்பளத்தைக் குறித்து எத்தனை சட்ட சபை அங்கத்தவர்கள் முயற்சி செய்தார்கள்? சில சங்கங்கள் மூச்சுவிட்டிருக்கின்றன என்பதைச் சிலர் அறிவர். சட்டசபையிலும் ஒருமுறை தமிழ்க் காற்று வீசியதாகக் கேள்விப்படுகின்றோம். இச் சிறு முயற்சிகள் அரசாங்கத்தாரைக் கவனிக்கச் செய்யா. பல மகாநாடுகள் கூடிப் பேரியக்கமும் முழக்கமுஞ் செய்யல் வேண்டும். இம் முயற்சிகளுக்கு இடையூறு நம்மவர்களே செய்வார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களை யொரு பொருட்படுத்தாது குறைகளை அரசாங்கத்தாருக்கு முறையிட ஊக்கமும் உறுதியும் நமக்கு வேண்டும். இக் காரியத்தில் அரசாங்க உத்தியோகஸ்தர்களுங் கலந்து உழைக்கலாம். - தமிழ்ப் புலவர்களே! ஆங்கிலப் புலவர்கள் பெருமையை உற்றுநோக்குங்கள்: “பொறாமை’ என்பதைக் களைந்து கடலிலே எறியுங்கள்; ஆகுபெயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/198&oldid=695492" இலிருந்து மீள்விக்கப்பட்டது