பக்கம்:திரு. வி. க.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 189

அன்மொழித்தொகை சண்டையை யொழியுங்கள்; ஒய்ந்த காலத்தில் ஆங்கிலம் பயின்றோரை அடைந்து பூதபெளதிக தத்துவ சாஸ்திரங்களைக் கேட்டுத் தற்காலத்துக்கேற்ற உணர்ச்சி பெற முயலுங்கள். ஜனத்தலைவர்கள் தங்களுக்குள் வேறு வழிகளிலுள்ள வேற்றுமைகளைப் பாராட்டாது உங்கள் முன்னேற்றத் துக்காக உழைப்பார்கள். மடாதிபதிகளே! தமிழ் வளர்ச்சிக்காயினும் நீங்கள் முயற்சி செய்யலாகாதா”.

வாழ்க்கைத் தொடக்கத்தில் இரண்டாண்டுக் காலம் திரு.வி.க.வின் தமிழ் நடை எவ்வாறு இருந்தது, எவ்வாறு வளரத் தொடங்கியது என்பதை ஒருவாறு கண்டோம். ஆனால், அவருடைய நடையில் இத்துணை மாறுபாடு இருக்கிறதே தவிரக் கருத்து வளர்ச்சியில் 1918ஆம் ஆண்டிலேயே சமரச சன்மார்க்கம் முகிழ்க்கத் தொடங்கி விட்டது. -

பத்திரிகாசிரியர்

1917ஆம் ஆண்டு டிசம்பரில் தேச பக்தன் ஆசிரியப் பதவியை ஏற்ற திரு.வி.க. 1920 ஜூலையில் அப் பதவியினின்றும் விலகினார். பின்னர் 1920 அக்டோபரில் நவசக்தி'யைத் தொடங்கி 13 ஆண்டுகள் தொண்டாற்றினார். எனவே, பதினாறு ஆண்டுகள் பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றினார் பெரியார். அப்பத்திரிகைகளில் ஆசிரியக் கட்டுரைகளும் சிற்சில சமயங்களில் வேறு கட்டுரைகளும் வரையப்பெற்றன. நவசக்தி'யில் சிலம்பொலி என்னும் தலைப்பின்கீழ் பல்வகைக் கட்டுரைகள் எழுதப்பெற்றன. அவற்றைத் திரட்டித் தமிழ்ச் சோலை என்ற தொகுப்பு நூல்

வெளியிடப் பெற்றது.

தேசபக்தாமிர்தம், பக்கம் 121, 122.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/199&oldid=695493" இலிருந்து மீள்விக்கப்பட்டது