பக்கம்:திரு. வி. க.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 ஆ அச. ஞானசம்பந்தன்

திருவிகவைப் பத்திரிகாசிரியர் என்ற நோக்குடன் பார்க்கும்போது அவர் நடத்திய இதழ்கள் எவ்வகையைச் சேர்ந்தவை என்பதையும் கருத்தில் இருத்தல் வேண்டும். அவரே கூறுவதுபோல இவை இரண்டும் அரசியற் கிளர்ச்சிக்கென்றே தொடங்கப்பெற்றனவாகலின் அவ்வப் போதைய அரசியல் நிலையை ஒட்டியே தலையங்கங்கள் தீட்டப்பெற்றன. அவற்றுள் சிலவும் தமிழ்ச் சோலை'யில் இடம் பெற்றன. இந் நூலுள் எல்லாம் ஆண்டவன் செயல், ‘உலகின் மெலிவு’, ‘இயந்திரங்களும் மனிதர்களும்’, ‘சத்தும் உணவும்’, ‘நெய்தற்தொழில், முதலாளி தொழிலாளி, ‘கூடியரோகம் என்பன போன்ற கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 1920 முதல் 1933 வரை நடந்த ஒரு தமிழ் வார இதழில் இத்தகைய பல்வேறு வகைப்பட்ட பொருள்கள் பற்றிய அறிவை வளர்க்கும் கட்டுரைகள் வந்தன என்றால், அப் பத்திரிகைக்குத் தமிழ் நாட்டில் நல்ல செல்வாக்கும் இருந்துவந்தது என்றால், அதனை நடத்திய ஆசிரியரைப் பாராட்டாமல் இருத்தல் இயலாது. இந்தக் கால எல்லையில் தமிழ்நாட்டில் பத்திரிகைகள் இல்லை என்று கூற முடியாது. ஆனால், இன்றிருப்பது போல அத்துணை அதிகமாகவும் இல்லை. 1920-33 கால அளவில் ‘சுதேசமித்திரன் அதிக அளவில் தெரிந்திருந்தது. வார மாத இதழ்கள் கதைகளைத் தாங்கி அவற்றிற்கு முதலிடத் தந்து வெளிவந்து கொண்டி ருந்தன. அவற்றுள் அரசியலைப் பற்றி எழுதும் தாள்கள் ‘சுதேசமித்திரன், இந்தியா என்பவையே. குடியரசு போன்ற தாள்கள் சமுதாயப் பிரச்சினைகளையே பெரிதும் எழுதின. அந் நாளில் அரசியலைத் தமிழில் எழுதமுடியாது என்று கருதினராகலின், நூற்றுக்கு நாற்பது சொற்கள் ஆங்கிலத் திலும் இருபத்தைந்து சொற்கள் வடமொழியிலும் எடுத்துக் கொண்டு, எஞ்சியவற்றைத் தமிழ்ச் சொற்களாக இட்டு எழுதிவந்தனர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/200&oldid=695495" இலிருந்து மீள்விக்கப்பட்டது