பக்கம்:திரு. வி. க.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 193

பலர் இம்முறையில் முயன்றிருக்கலாம். ஆனால், வெற்றி பெற்றவர் அவர் ஒருவரே.

1921இல் அவருடைய எழுத்து நடைக்கும் அதன் வளர்ச்சிக்கும் சில எடுத்துக்காட்டுகள்:

“தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கூட்டத்தார் நிகழ்ச்சி முறைகளைத் தமிழிலேயே நடாத்தல் வேண்டும்; மாறாக நடப்பாராயின், நாட்டார் அவரைத் தமிழ் வழியில் நடாத்த முயலல் வேண்டும். தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கூட்டத்தார், காங்கிரஸ் தீர்மானப்படி ஆங்காங்கே நாட்டுக் கல்லூரி அமைக்கக் கடமைப் பட்டிருக்கின்றனர். முதலாவது, சென்னையில் இரண்டு தமிழ்ச் சாலைகள் அமைக்குமாறு அவரை வேண்டுகிறோம். ஒன்றில் தமிழ்மொழி போதிக்கப் படல் வேண்டும்; மற்றொன்றில் மேல்நாட்டுப் பொருள் நூல், பூத, பெளதிக நூல் முதலியன தமிழ் நாட்டவர்க்குப் பயன்படும் பொருட்டு, அவற்றைத் தமிழில் மொழி பெயர்க்கப் போதிக்கப்படல் வேண்டும்.”

“ஐந்து நதி பாயும் அழகிய நாட்டண்ணலே! முப்பது கோடி மக்களின் ஆருயிரே! லஜபதி! லஜபதி! தும் பிரிவை எங்ஙனம் ஆற்றுவோம்! காலமெல்லாம் நாட்டின் உரிமைக்கென ஊனையும் உயிரையும் பிழிந்து பிழிந்து உயிர்துறந்த பெருமானே! நூம்மை எங்ஙனம் மறப்போம்! இறுதிக் காலத்தும் நாட்டின்பொருட்டு அதிகாரவர்க்கத்தின் பொல்லாத அடி தாங்கியன்றோ உயிர் நீத்தீர்! முப்பது கோடி மக்கள் தலைவரே! எங்கள் பொருட்டு உயிர் நீத்தீர். நுந் தியாகத்தை எங்கனம் மறப்போம்!

  • தமிழ்ச் சோலை’, பக்கம் 10.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/203&oldid=695498" இலிருந்து மீள்விக்கப்பட்டது