பக்கம்:திரு. வி. க.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 195

1933இல் அந்த நடை ஏறத்தாழ அதே நிலையில் தான் இருந்துள்ளது:

“தமிழ் மகனே! விடுதலை விடுதலை என்று வெறுங் கூச்சலிடுவதால் பயன் என்ன! விடுதலை முயற்சி, விடுதலை தருவதாயிருத்தல் வேண்டும். விடுதலை விடுதலை என்று சிறைக்கூடத்தில் நோய் வாய்ப்பட்டுள்ள தமிழ்த் தாயைச் சுற்றிலும் தீயிட்டு எரிப்பது அவள் நோய் போக்கும் மருந்தாகுமா என்பதைக் கவனிக்க தமிழ் அன்னை இடைக் காலத்தில் சிறைப்பட்டாள்! பின்னே நோய்ப்பட்டாள்; இப்பொழுது விடுதலை என்னும் பெயரால் எரிக்கப்படுகிறாள். அந்தோ! நாங்கள் தாய்க்கு எரியா மூட்டுகிறோம்; விடுதலைக்கன்றோ முயல்கிறோம்’ என்று சில சகோதரர்கள் கருதலாம். சகோதரர்களே! உங்கள் பேச்சில் எழுத்தில் விடுதலை விடுதலை’ என்னும் ஒலியும் வரியும் இல்லாமல் இல்லை. ஆனால், உங்கள் பேச்சால் எழுத்தால் விளைவதென்னை?”

1941இல் அந்த நடை இன்னும் மெருகு ஏறிச் சுருக்கம் பெற்று வீறு கொள்கிறது:

“நல்ல எண்ணம் தீய எண்ணம் என்னும் இரண்டில் எது ஆற்றல் வாய்ந்தது? சிலர் நல்ல தென்பர்; சிலர் தீயதென்பர். சில சமயம் தீயதே பேராற்றல் வாய்ந்ததுபோலத் தோன்றும். ஆழ்ந்த ஆராய்ச்சியால் நல்லதே பேராற்றல் வாய்ந்ததென்பது விளங்கும். எண்ணத்தின் ஆற்றல் பொதுவாக அது தோன்றும் இடத்தைப் பொறுத்து நிற்பது ஒருவனது நெஞ்சம் தீமையையே எண்ணி, ஆழ எண்ணி அதில் ஒன்றி அதுவாகிறது இன்னொருவன் நெஞ்சம்

  • தமிழ்ச் சோலை, பக்கம் 31.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/205&oldid=695500" இலிருந்து மீள்விக்கப்பட்டது