பக்கம்:திரு. வி. க.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 ல் அச. ஞானசம்பந்தன்

மாம்பழம் மாங்காயைப்போல உணர்ச்சி வெறியூட்டு வதில்லை. ஆனால், பெரும் பயன் விளைக்கிறது.

அதேபோலத் திரு.வி.க.வின் பத்திரிகை நடைவாயில் நீர் ஊறச்செய்யும் மாவடுபோன்றது. இவ்வாறு கூறுவதால் அதன் இயல்பும் பயனும் எவை என்பதையே குறிக்கிறேன். அந்த நடையின் வளர்ச்சியில் பிற்காலத் தெழுந்த நூல் நடையில் அறிஞரின் மன வளர்ச்சியை, ஆழ்ந்த அனுபவத்தைக் காண முடிகிறது.

கவிதைத் தோற்றம்

உரைநடை எழுதுங் காலத்தில் தாமே சிந்தித்துச் சிந்தனையை உடனே எழுத்தில் வடித்துவிட்டார் அறிஞர். பிற்காலத்தில் பார்வை பழுதாகிவிட்ட நிலையில் தாமே எழுத்து வேலையை மேற்கொள்ள முடியாத நிலையில் மில்டனைப்போல நீண்ட நேர சிந்தனையைச் சுருங்கிய கால அளவில் பிறரைக் கொண்டு எழுதுவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவ்வகைப் பணிக்குக் கவிதையே சிறந்த சாதனமாக அமைந்தது.

இவ்வாறு கூறியவுடன் கண் பார்வை மங்கிவிட்ட காரணத்தால்தான் திரு.வி.க. கவிதைமூலம் கருத்துகளை வெளியிடத் தொடங்கினார் போலும் என்று நினைத்துவிட வேண்டா. தேவையை முன்னிட்டுக் கவிதை எழுதியவரல்லர் அவர். 1931 முதல் 1953 வரை கவிதைகள் புனைந்துள்ளார். அந்நூல்களிலும் அவருடைய வளர்ச்சியைக் காணமுடிகிறது. கவிதை நூல்களின் பட்டியல் இதோ தந்துள்ளேன்:

1931இல் உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல்

1932இல் முருகன் அருள் வேட்டல் 1938இல் திருமால் அருள் வேட்டல் 1942இல் பொதுமை வேட்டல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/208&oldid=695503" இலிருந்து மீள்விக்கப்பட்டது