பக்கம்:திரு. வி. க.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 இ. அச. ஞானசம்பந்தன்

பன்மையில் மயங்கும் பாரினில் ஒருமைப்

பார்வையே பெறுநிலை விழைந்தேன் நன்மையே புரிய நாதமாந் தேரை

நடத்திய வள்ளலே அருளாய் மென்மையு ளல்லிக் கேணியில் மேவும் மேலவா சீலநா யகனே."t 1942இல் எழுந்த பொதுமை வேட்டலிலிருந்து ஒரு பாடல். மனக்கசிவை வெளியிடும் பாடல் இது:

கல்வியில் வீழ்ந்தேன் கலைகளில் வீழ்ந்தேன் கருணையில் வீழ்ந்திலேன் பாவி செல்வமோ இல்லை செற்றினில் விழத்

திருவருட் டுணையென மகிழ்ந்தேன் பல்வகைக் களியில் படருறா நெஞ்சம்

பரமனே அளித்தனை வாழி தொல்வினை அழிந்தால் நல்லுடல் பெறுவேன் தொடர்ந்தனன் பிழைபொறுத் தருளே."; 1950இல் பிறந்த இருளில் ஒளி என்னும் நூலிலிருந்து எண்ணத்தின் உயர்வை அறிவிக்கும் குறள் நான்கு:

“தேவைக்கு மேலெண்ணாச் சிந்தை, உயர்வெண்ணம் மேவிட உந்தவிடும் மேல்” (1)

தேவைக்கு மேல்நினையாச் சித்தம் செகமானால் யாவும் ஒழுங்குபடும் அன்று’ (2)

தேவைக்கு மேலே திரட்டும் இடங்களில் தாவும் கொலை, களவு சார்ந்து (3)

திருமால் அருள் வேட்டல், பக்கம் 28 பாடல் 3. - | பொதுமை வேட்டல், பக்கம் 75 பாடல் 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/210&oldid=695506" இலிருந்து மீள்விக்கப்பட்டது