பக்கம்:திரு. வி. க.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 205

பெற்ற திருவருட்செல்வரானமையான், ஆண்டவ னருள், வானிற் பதிந்திருந்த மெய்ம்மையை உலகெ லாம் என்னும் மெய்ம்மொழியால் அவருக்கு வழங்கிற் றென்க.”*

இனி, பாடலின் முதல் அடிக்குமட்டும் பெரியார் பல பக்கங்கள் பொருள் எழுதிச் செல்கிறார். ஒரு பகுதியை மட்டும் கீழே தருகின்றேன்.

“உலகெலாம் தோன்றும் இடமெது: ஒம் அன்றோ! ஓங்காரத்துள்ளே உதித்த ஐம்பூதங்கள்ஓங்காரத்துள்ளே உதித்த சராசரம்’ என்றார் திருமூலர். ‘உலகெலாம் என்பது சிறப்பாக நூலின் முதலிடை கடையிலும் பொதுவாக வேறு பலவிடங்களிலும் ஒளிர ஆசிரியர் அருளியிருத்தலை ஆராய்க.

பாட்டின் முதற்கண் உகரம் ஒலித்து ஒளிர்கிறது. உகரம் பிரணவ எழுந்து மூன்றனுள் ஒன்று. அ. உ. ம் -இம்மூன்றுஞ் சேர்ந்த ஒன்றே ஒம் என்னும் பிரணவம். இம்மூன்றெழுத்துக்களும் தோற்றம் நிலை இறுதி என்னும் முத்தொழிலைக் குறிப்பன. நடுவன தாகிய உகரம் நிலைப்பின் அறிகுறி. நிலைப்பின் விழுப்பம் தெரிக்க உகரம் முதற்கண் அமைந்தது போலும்! இருளினின்றும் படைக்கப்படும் உயிர்கள், மீண்டும் இருளில் ஒடுங்காது வீடுபேறெய்தல் வேண்டுமென்பதே படைப்பின் நோக்கமாகும். அந் நோக்க நிறைவேற்றத்துக்கென்றே நிலைப்பு நடுவில் நிற்கிறது. நிலைப்பில், வீடுபேற்றுக்கென வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. அவைகளை நல்வழியில் பயன்படுத்தாத உயிர்கள் இடையில் இடர்ப்படு கின்றன. வீடுபேற்றிற்குரிய வாய்ப்புகள் நிலைப்புக்

  • திருத்தொண்டர் புராணம், பக்கம் 11
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/215&oldid=695511" இலிருந்து மீள்விக்கப்பட்டது