பக்கம்:திரு. வி. க.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 207

வரியோன் -மாணிக்கவாசகர் நற்பதத்தார் நற்பதமே ஞானமூர்த்தி நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற-சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற சொலற்க்ரிய சூழலாய் இதுவுன் தன்மை -திருநாவுக் கரசர் ஆட்பாலவர்க்கருளும் வண்ணமும் ஆதி மாண்பும்-கேட்பான் புகில் அளவில்லை -திரு ஞான சம்பந்தர்; யார் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை-யார் அறிவார் அந்த அகலமும் நீளமும்-பேரறியாத பெருஞ்சுடரே ஒன்றதின்வேரறியாமல் விளம்புகின்றேனே-திருமூலர்.” அடுத்து நிலவுலாகிய நீர்மலிவேணியன்’ என்ற பகுதிக்கு விளக்கம் தரத் தொடங்கி, நிலவு, நீருடன் அவைகளின் இனமாய பிறவற்றையுங் கொள்க. அவை மண், தீ, காற்று, வான், ஞாயிறு, உயிர் என்பன. இவை எட்டும் அட்டமூர்த்தம் எனப்படும். அட்டமூர்த்தமாவது ஆண்டவன் இயற்கை வடிவினன் என்பதை அறிவுறுத்துவது. உலகு - மண்ணையும், சோதி - தீயையும் ஞாயிற்றையும், அம்பலம்-வானையும், ஆடுதல்-காற்றையும், வாழ்த்தி வணங்கல்-உயிரையும் நினைவூட்டும் சொற்குறிகள் என்றும் கொள்ளலாம். இம் முறையில் அட்டமூர்த்தத்தின் அடிப்படைக் கருத்தை விளக்கி அருளிய பெரியார், மனம் உள்ளவரை தோற்றமும், மனம் இறந்தால் தோற்ற மறைவும் ஏற்படுதலை விளக்கப் புகுந்து, முதல் இரண்டடிகளுக்கு மிகச் சீரிய முறையில் பொருள் விரிக்கின்றார். உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன்’ என்று நினைக்கும்போது உள்ளத்தில் ஒன்றும் தோன்றாது. நிலவுலாவிய நீர்மலி வேணியன் என்று நினைக்கும்போது உள்ளத்தில் ஒன்று தோன்றும். அத்தோற்றம் வழிபாட்டிற்கு இன்றியமையாதது. தோற்றத்தைக் கொண்டே தோற்றாமையை உணர்தல்

திருத்தொண்டர் புராணம், பக்கம் 17, 18.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/217&oldid=695513" இலிருந்து மீள்விக்கப்பட்டது