பக்கம்:திரு. வி. க.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 இ. அச. ஞானசம்பந்தன்

வேண்டும். ஆதலால் நிலவுலாவிய நீர்மலி வேணியனைக் கொண்டே உலகெலாம் உணர்ந்து இதற்கு அரியவனை உணர்தல் வேண்டும். இதனால் உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் என்பதற்கும் நிலவுலாவிய நீர்மலி வணியன் என்பதற்கும் தொடர்பு இருத்தல் காண்க அத்தொடர்பு இயற்கை வழி இறைவனை உணர்த்துவது என்று விரிவுரை செய்துள்ளார்.

பெரியார் அவர்கள் ஏறத்தாழ ஆயிரத்துத் தொள்ளா யிரத்துப் பதினெட்டாம் ஆண்டில் இருந்தே இயற்கை வழிபாட்டையும் அதன்மூலம் இறைவனை அடையும் வழி பற்றியும் பேசியும் எழுதியும் வந்துள்ளார். தேவாரம், பிரபந்தம் முதலிய நூல்களில் இறைவனை அட்டமூர்த்த மாகி என்றும், வேறாய் உடன் ஆனான் இடம் என்றும் ஆயிரக்கணக்கான இடங்களில் பாடியிருந்தும் அதனைப் பாராயணம் செய்கின்ற பலரும் இத்துணைச் சிறந்த வழியை நம் முன்னோர் காட்டியிருப்பதை உணரவில்லை.

இனி, அம்பலத்தாடுவான் என்ற தொடருக்குப் பிறரெல்லாம் திருவம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் செய்கின்றவன் என்றே பொருள் கொண்டனர். ஆனால், பெரியார் அவர்கள் இதன் எதிராகத் தமக்கே உரிய முறையில் பொருள் விரிக்கின்றார்:

&

அலகில் சோதியன் உலகு உயிர்கள் எல்லாவற்றினும் ஆங்காங்கே நின்று நின்று, அதற்கு அதற்கு ஒளி வழங்கி, அதனை அதனை இயக்கலான் ‘அம்லபத்தாடுவான் என்றார். அம்பலமாவது உலகெ லாம் என்க. எங்கும் அம்பலம்; எல்லாம் அம்பல மென்க. இதனை, ‘அம்பலமாவது அகில சரா சரம்-அம்பலமாவது ஆதிப் பிராண்டிஅம்பலமாவது அப்புத்தி மண்டலம்-அம்பலமாவது அஞ்செழுத்தாமே, அண்டம் எழுகோடி பிண்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/218&oldid=695514" இலிருந்து மீள்விக்கப்பட்டது