பக்கம்:திரு. வி. க.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. * 209

எழுகோடி-தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி -எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி-அண்டன் நடஞ்செயும் ஆயைந்தானே’, ‘காளியோ டாடிக் கனகாசலத் தாடிக்-கூளியோ டாடிக் குவலயத் தேயாடி-நீடிய நீர்திகால் நீள்வா னிடையாடி-நாளுற அம்பலத் தேயாடும் நாதனே, எங்குஞ் சிவமாயிருத்த லால் எங்கெங்குந்-தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே’, ‘ஆனந்த மாடரங் கானந்தம்-பாடல்கள் ஆனந்தம் பல்லியம் ஆனந்த ஆனந்தக் கூத்துகந் தானுக்கே’ ‘அண்டங்களோரேழும் அம்பொற் பதியாகப்-பண்டையாகாசங்கனைந்தும் பதியாகத் -தெண்டினிற் சக்தி திருவம் பலமாகக்-கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே’, ‘இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்-நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்-படங்கொடு நின்றவிப் பல்லுயிர்க் கெல்லாம்-அடங்கலுந் தாமாய் நின்றாடுகின் றாரே, ‘இருதயந் தன்னில் எழுந்த பிராணன்-கரகர ணாதி கலக்கும் படியே-அரதனமன்றினின் மாணிக்கக் கூத்தன்-குரவனாய் எங்கணுங் கூத்துகந் தானே என வருஉந் திருமூலர் திருவாக்குகளால் தெளிக”, அடுத்து மலர் சிலம்படி என்ற தொடருக்கு மலர் போன்ற சிலம்படி என்று பலரும் பொருள் கூறாநிற்ப, பெரியார் அவர்கள் அதனை வினைத்தொகையாக்கி அண்ட சராசரம் முழுவதும் அவனுடைய திருவடி, அதாவது திருவருள் விரிந்து பரந்து இருத்தலை விளக்குகின்றார். மலர் சிலம்பை வினைத்தொகையாகக் கொண்டமையின், மலர் என்ற காலம் கரந்த பெயரெச்சம் சிலம்புக்கு அடையாகி, புலனடக்கி ஏகாக்கிரகச்சித்தர்களாக அமைதியில் திளைத்

திருத்தொண்டர் புராணம், பக்கம் 22, 23.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/219&oldid=695515" இலிருந்து மீள்விக்கப்பட்டது