பக்கம்:திரு. வி. க.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 2s1.

ஒன்றை உணர இயலாதிருக்கும் உயிரின் சிறுமை என்னே! என்னே ‘t -

இப் பாயிரத்தின் உரை முழுவதையும் ஆர அமர இருந்து கற்போர், பெரியார் அவர்களின் இலக்கண இலக்கிய அறிவோடு சாத்திர அறிவும் எத்துணைப் பரந்தும் விரிந்தும் உள்ளது என்பதை அறிய முடிகிறது சரியை. கிரியை, யோகம், ஞானம் என்ற நால்வகை நிலையிலும் உள்ளவர் அனை வருக்கும் இவ்வொரு பாடல் மூலம் வழி வகுக்கின்றார் தெய்வப்புலமைச் சேக்கிழார் பெருமான் என்பதைப் பெரியார் அழகாக இதோ விளக்குகின்றார்:

“சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நான்கும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்து அல்ல. அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய. அத்தொடர்பு வழியே மக்களின் சமய வாழ்வும் அரும்பி மலர்ந்து காய்த்துக் கனியும். விரும்புஞ் சரியை முதல் மெய்ஞ் ஞான நான்கும் அரும்பு மலர்’ காய்கனிபோல் அன்றோ பராபரமே என்பது தாயும்ானார் திருவாக்கு.

இவை மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்’ என்பதிலும் விளங்குகின்றன. மல்ர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்’ என்பதை நான்கிலும் பொருத்திக் கொள்க. நிலவுலாவிய நீர்மலி வேணியன்றன்” மலர் சிலம்படி வாழ்த்தி வண்ங்கலாவது, மனமொழி மெய்களால் திருவடி தொழுதல். ‘அம்பலத்தாடு வான்றன் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்கலாவது, திருவடியைத் திருவருளாக வேண்டி நிற்பது அலகில் சோதியனது மலர் சிலம்படி வாழ்த்தி வணங்கலாவது, புறமறைந்து ஒசை ஒலியால் ஒளி தோன்ற, அகமலர, அம்மலரில் வண்டெனப் படிந்திருத்தல். உலகெலாம்

t திருத்தொண்டர் புராணம், பக்கம் 28.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/221&oldid=695518" இலிருந்து மீள்விக்கப்பட்டது