பக்கம்:திரு. வி. க.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 இ. அ.ச. ஞானசம்பந்தன்

உணர்ந்தோதற்கரியவனது மலர் சிலம்படி வாழ்த்தி வணங்கலாவது. அகப்புற வேற்றுமையின்றிக் காண்டல் கேட்டல் முதலிய வுணர்வின்றித் தான் வேறு சிவம் வேறு என்னும் எண்ணமின்றி, இரண்டற்ற நிலையில் நிரதிசயானந்தத்தில் தேங்கிக் கிடப்பது.

‘மலரடி என்பதை ஞானத்துக்கும், சிலம்படி, என்பதை யோகத்துக்கும், அடி வாழ்த்தலைக் கிரியைக்கும் அடி வணங்குவோம் என்பதைச் சரியைக்கும் கொள்ளுமுறையிலும் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம் என்பது அமைந்திருக்கிறது:

இம்முறையில் பாடல் முழுவதற்கும் பல பக்கங்கள் பொருள் விரித்த திரு.வி.க. அவர்கள் இதுவரையில் பெரிய புராணத்துக்கு உரைவகுத்த யாரும் செல்லாத நிலைக்குச் சென்று இத்தகைய நூல் எவர்க்குரியது: உலகில் உள்ள அன்பர்க்கெல்லாம் உரியதென்பது அதன் உள்ளுறையால் புலனாகும். உலகெலாம் என்று ஒலித்தெழும் குறிப்பே, உலகில் உள்ள அன்பர்கட்கெல்லாம் இந்நூல் உரியதென்பது அறிவிப்பதாகிறது. அப்பாலும் அடிசார்ந்தார் புராணமும் பிறவும் இக்கூற்றை வலியுறுத்தல் காண்க. உலகெலாம் என்னும் மெய்யறிவு விதையினின்றும் எழுந்த பெரிய புராணம் என்னும் அன்பு மரம், தனது அருள் நிழலை எல்லார்க்கும் வழங்கும் பெற்றியது என்க.

பெரிய புராணத்தின் பொதுத் தன்மைபற்றி இவ்வாறு இருப்பவும், இதனை ஒரு குறிப்பிட்ட சமயத்தாருக்குரிய நூலாக்கி, இதனைக் கற்பவர் சிவதீட்சை முதலிய கட்டுப்பாடுகளைப் பெற்றவராக இருத்தல் வேண்டும் என்றெல்லாம் எழுதிய குறுகிய நோக்காளர் எங்கே? அனைத் துலகத்திற்கும்-ஏன்?-அனைத்துச் சமயங்கட்கும். கூட

  • திருத்தொண்டர் புராணம், பக்கம் 29, 30.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/222&oldid=695519" இலிருந்து மீள்விக்கப்பட்டது