பக்கம்:திரு. வி. க.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. 213

இதனைப் பொது நூலாக்கிப் பொருள் கூறிய திரு.வி.க. எங்கே? சமரச சன்மார்க்கம் என்பது வேற்றுமையில் ஒற்றுமை காணும் விந்தைக்குரிய செயலே ஆகும். பெரிய புராணம் என்பது சைவர்கட்குரிய பன்னிரண்டு திருமுறை களில் ஒன்று என்றும், பிறவிச் சைவர்களே அதனைக் கற்பதற்குரிய அதிகாரிகள் என்றும், அவ்வதிகாரிகளாகப் பிறந்தவர்களுள்ளும் சிவதீக்கை முதலிய நியமங்களை மேற்கொண்டவர்களே இதனை ஒதும் தகுதி பெற்றவர்கள் என்றும் சொல்லிவந்தனர். மேலே கூறிய தகுதி பெற்ற வர்களும் பெரிய புராணத்தை ஒதினார்கள். ஆனால், வட மொழி மந்திரங்களை உச்சரிப்பது போலவே இதனையும் அன்றாடக் கடமையாகப் படித்தார்கள். ஒருவேளை பெரிய புராணம் அவர்கட்கு வீடுபேற்றை வழங்கியிருக்கலாம். ஆனால், மக்கட் சமுதாயம் அனைவரையும் ஒன்றாக்கி ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற குறிக்கோளுக்கு இலக்காக்கும் வழிகளுள் பெரிய புராணமும் ஒன்று என்ற பேருண்மையை முதற் பாட்டின் விளக்கவுரையின்மூலம் தமிழ் நாட்டிற்கும்-ஏன்?-அனைத்துலகத்திற்கும் வழங்கிய திரு.வி.க.வின் உரையாசிரியத் தன்மையும் வள்ளன்மையும் வாழ்வதாக!

‘கடவுட் காட்சியும் தாயுமானாரும் என்ற நூலில் ஐவகை எனும் பூதம் ஆதியை வகுத்து’ என்ற பாடலுக்கும், இமயமலை அல்லது தியானம் என்ற நூலில் தோடுடைய செவியன் என்ற நூலில் நம்மாழ்வாரின் பாடலுக்கும் வியக்கத்தக்க முறையில், ஈடு எழுதிய பெரியவர்களை ஒப்ப உரை செய்துள்ள இப்பெரியார் திருக்குறளில் பாயிரத்துக்கும் அறத்துப் பாலில் இல்வாழ்க்கை முடிய உள்ள பகுதிக்கும் விரிந்த முறையில் உரை வகுத்துள்ளார்.

திருக்குறள் விரிவுரை

உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற நூலாகிய திருக்குற ளுக்கு உரை கண்ட பெருமக்கள் அனைவரும், அந்நூலுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/223&oldid=695520" இலிருந்து மீள்விக்கப்பட்டது