பக்கம்:திரு. வி. க.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 215

வீட்டை மறைத்திருப்பது கட்டு, கட்டு அறுந்ததும் வீடு பொருளாகும்.

கட்டும், கட்டின் பாகுபாடுகளும் திருக்குறளில் சிலவிடங்களில் புகுந்திருக்கின்றன. இருள்சேர் இருவினை’, ‘அழுக்காறவா வெகுளி இன்னாச் சொல், பிறப்பென்னும் பேதைமை’, ‘சார்புகெட்’, ‘காமம் வெகுளி மயக்கம்’, ‘பற்றுவிடற்கு என வரூஉந் திருக் குறள் மொழிகளை நோக்குக.

கட்டறுந்தால் மனம் மாசிலதாகும். மாசற்ற இடம் வீடாய்ப் பொலியும். இந் நிலையுற்றார்க்கு எல்லாம் வீடே எந்நாளும் இன்பமே துன்பமில்லை, என்று அப்பரும், அருநாகவையும் நீ என்று. நம்மாழ்வாரும், பரலோகராச்சியம் உம்முடைய உள்ளத்திலிருக்கிறது என்று கிறிஸ்து பெருமானும் அருளிய செம்மொழிகளை யுன்னுக. இம் மொழிகளை இப்பெரியார் யாண்டிருந்து அருளினர்? இவ்வுலகத் திலிருந்தே அருளினர். இவருக்கு இவ்வுலகம் எவ்வாறு தோன்றிற்று? வீடாகவே தோன்றிற்று. ஆதலால், வீடு என்பது ஒரிடத்தில் தனியே இருப்பதன்றென்க.

கட்டையறுத்தற்கு அறவழியில் நின்று, கல்வி பயின்று, தொழில் புகுந்து, பொருளிட்டி, இன்பம் நுகர்தல் வேண்டும். இச்செந்நெறியே வாழ்வுக்குரியது. இதுவே இயற்கை வாழ்வு. இந் நுட்ப முணர்ந்த அறிஞர், அறம் பொருள் இன்ப வாழ்வையே உலகுக்கு அறிவுறுத்தினர். இம்மூன்றிற் கலவாத வீடு ஒன்று தனித்திருப்பதாக அவ்வறிஞர்க்குத் தோன்றவில்லை. அறம் பொருள் இன்ப வாழ்வில் வீடு பொலிதல் அவர்க்கு நனி விளங்கிற்று. உண்மை கண்டவர் உண்மை உரைத்தல் இயல்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/225&oldid=695522" இலிருந்து மீள்விக்கப்பட்டது