பக்கம்:திரு. வி. க.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. 217

அறம் பொருள் இன்ப வாழ்வு, வீட்டை உணர்த்த வல்லது. ஆதலால் இந்நாளில் அறம் பொருள் இன்ப வாழ்வு, அதாவது இயற்கை வாழ்வு பெருகுதல் வேண்டும். இதற்கு உறுகருவியாகத் துணைபுரிய வல்லது திருவள்ளுவரது முப்பால் நூல்.” இக் கருத்தைக் கூறி முடிந்த பின்னர், பெரியார், திருவள்ளுவர் நூல் மரபு கடந்தது; அது மன்பதைக்குரியது; அதை மரபு என்னுஞ் சிறையில் புகுத்த முயல்வது அறமாவது என்றும் மனம் நொந்து நம்மை வேண்டிக் கொள்கிறார்.

‘வான் சிறப்பு, நீத்தார் பெருமை’, ‘அறன் வலியுறுத்தல்’ என்ற அதிகாரங்கள் முறையே பொருள்-இன்பம்-அறம் ஆகிய மூன்றற்கும் அறிகுறியாக நிற்கின்றன என்று பெரியார் எழுதியது, மாபெரும் புரட்சிக் கருத்தெனவே கொள்ளலாம். இதைவிடப் புதுமையான கருத்து நீத்தார் பெருமை, காமத்துப்பாலின் தெளிவு என்பது எனது ஆராய்ச்சியிற் போந்த உண்மை’ என்று அவர் எழுதியுள்ளதேயாகும்.

‘கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் உள்ளுறையும்

அமைவும் கூறும் சிறப்பை அறிந்து சிந்தித்தல் வேண்டும்.

- ‘கடவுள் வாழ்த்தில் கடவுள் எல்லாவற்றையுங் கடந்துள்ளமை, இயற்கையை உடலாக் கொண்டமை குருவினுள் கோயில் கொண்டமை. திருவடி போற்றல் ஆகிய நான்கு பொருள் பொலிதருகின்றன. முதல் நிலை வழிபாட்டுக்குரியதன்றாதலின் அதை முதற் பாட்டில் நுண்மையாகவும், இரண்டாவது வழி பாட்டுக்குரியதாயினும் அதன் பயன் சிலர்க்கே விளைவதாதலின் அதை இரண்டாம் பாட்டில் குறிப் பாகவும், மூன்றாவது பலர்க்குப் பயன்படுவதாதலின்

திருக்குறள் (பாயிரம்) விரிவுரை, பக்கம் 12-15.

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/227&oldid=695524" இலிருந்து மீள்விக்கப்பட்டது