பக்கம்:திரு. வி. க.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2$8 இ. அச. ஞானசம்பந்தன்

அதை மூன்றாம் பாட்டில் விளக்கமாகவும், நான் காவது செயலுக்குரியதாதலின் அதை ஏழு பாக்களில் விரிவாகவும் திருவள்ளுவர், ‘கடவுள் வாழ்த்தில் அருளியுள்ளதை ஆழ நினைந்து தெளிவுபெற வேண்டு வது மக்கள் கடமை.”

இனி, ஒவ்வொரு குறளுக்கும் அப்பெரியார் கண்ட விரிவுரையை உற்றுநோக்கினால், சிவஞான முனிவரும், பெரியவாச்சன் பிள்ளையும், பரிமேலழகரும் ஓர் உருக்கொண்டு வள்ளலாரின் சமரசமும் பெற்றுத் திரு.வி.க. என்ற பெயருடன் போந்து உரை எழுதியதாகவே நினைய வேண்டியுளது. இவ்வாறு கூறுவது புனைந்துரை என்று தயைகூர்ந்து நினைந்துவிட வேண்டா.

எழுத்தும் ஆதிபகவனும்

எழுதப்படுதலின் எழுத்து என்று பிறரெல்லாம் இலக்கணங் கூறுகையில், எழுவதால் எழுத்து, அதாவது, நாதத்தினின்றும் ஒலியாகவும் வரியாகவும் எழுவது; முகிழ்ப்பது; ஆகுபெயர் என்றெழுதிய பெருமை திரு.வி.க.வையே சாரும். சாதாரண நெடுங்கணக்கில் காணப் பெறும் அகரம்’ என்று பொருள் கோடாது நாதமூலமாகிய ‘ஆதி அகரம் என்று பொருள் விரிக்கும் பொழுதும் இவ்வண்டத்திலுள்ள பலகோடி உலகங்களையும் நேர்பட இயக்குதலின் ஆதிபகவன்’ என்று பொருள் விரிக்கும் பொழுதும் பெயரிவாச்சன் பிள்ளையாகிறார் திரு.வி.க (ஆதி என்ற சொற்கு நேர் ஓட்டம் என்ற பொருள் உண்டு என்பதை யாரே மறுக்கவல்லார்? ஆனால், உலகை ஆதி செய்யும் பகவன்-அண்டங்கள் நிலைபிறழாமல் சுற்றிவருமாறு இயக்குபவன் பகவன் என்று பொருள்கூற ஒரு திரு.வி.கதான் வர வேண்டும்)

  • திருக்குறள் (பாயிரம்) விரிவுரை, பக்கம் 25.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/228&oldid=695525" இலிருந்து மீள்விக்கப்பட்டது