பக்கம்:திரு. வி. க.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. 13

என்று கூறுகிறோம். வேறு எவ்விதப் பணி புரிபவர்களையும் அதாவது சமுதாயத்திற்கு அவ்வப்போது தேவைப்படும் உதவிகளை, விஞ்ஞானப் புதுமைகளைச் செய்து தருபவர்களைத் தொண்டர்கள் என்று கூறும் பழக்கம் இல்லை. கற்பூரத் தொண்டர்

தம்மையே தொண்டில் அழித்துக்கொண்டு மானிடச் சமுதாயத்திற்குத் தொண்டு புரிவோரை மட்டுமே தொண்டர்கள் என்று கூறுகிறோம். இவர்கள் செய்யும் தொண்டு எந்த வகையைச் சேர்ந்ததாயினும் சரி, மக்கள் பசிப்பிணியைப் போக்குவதிலிருந்து மனவிருளை ஒட்டும் இலக்கியத் தொண்டு, மொழித் தொண்டிலிருந்து, நாட்டு மக்களைத் தட்டி எழுப்பும் தேசத் தொண்டிலிருந்து, அஞ்ஞானத்தை ஒட்டும் ஆன்மிகத் தொண்டுவரை அனைத்தும் ஒரே வகையைச் சேர்ந்தவையாகும். எந்த வகையைச் சேர்ந்ததாயினும் இவ்வகைத் தொண்டு புரிவோர் கற்பூரம் போல் இறுதியில் தாம்கூட எஞ்சுவதில்லை. -

திரு. வி.க.வே தொண்டு

திரு. வி.க. அவர்கள் இந்த வகைத் தொண்டரே ஆவார். மேலே கூறிய அனைத்துத் தொண்டுகளையும் அவர் செய்துள்ளார் என்றால், அவ்வாறு செய்ததில் தான் என்ற ஒரு முனைப்பே இல்லாத முறையில் செய்தார் என்றால் அவரைவிடச் சிறந்த ஒரு பெரியவரைக் காண்டல் கடினம். திரு. வி.க. என்ற மூன்றெழுத்துக்களை மாற்றி வேறு ஒரு பெயர் தரவேண்டுமெனில் தொண்டர் என்ற பெயரே முற்றிலும் பொருந்துவதாகும். இத்தொண்டுள்ளத்தைப் பெற்றமையாலேயே அவரால் இத்துணைப் பெரிய சாதனையை நிகழ்த்த முடிந்தது. தமிழர், தமிழ் இலக்கியம் ஆகிய இரண்டிற்கும் அருந் தொண்டாற்றிய அப்பெரியாரின் தொண்டைச் சற்று விரிவாக ஆராயலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/23&oldid=695527" இலிருந்து மீள்விக்கப்பட்டது