பக்கம்:திரு. வி. க.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 இ அச. ஞானசம்பந்தன்

வேண்டியும் ஆசிரியர் எழுத்தெல்லாம் என்று விளக்க மாகக் கூறினர்.”

தருக்க முறையிலும் இத்துணைச் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும்பொழுது எழுத்து’ என்னுஞ் சொல்லுக்கு வயிரக் குப்பாயம் இட்ட சிவஞான முனிவராகவே ஆகிவிடுகிறார் திரு.வி.க.

பொறிவாயில்

அடுத்துப் பொறிவாயில் ஐந்தவித்தான்’ என்ற குறளுக்குச் செய்துள்ள விளக்கவுரை நம் அகக்கண்களைத் திறப்பதாகும். பரிமேலழகருங்கூட ஐந்தவித்தான் என்ற சொல்லுக்கு ஐந்து அவாவினையும் அறுத்தானுடைய என்றே பொருள் கூறுகிறார். மேலும், இதனால் இறைவன் நெறி நிற்றல் செய்தார் வீடு பெறுவர் என்றுங் கூறுகிறார். இக் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்து இப் பகுதிக்குப் புத்துரை காணப் புகுந்த திரு.வி.க. கீழ்வருமாறு எழுதுகிறார்: * “ஐம்புலனை அவித்தலாவது, ஐம்பபுலனையும் அடக்குவது; புலனை அறவே அழிப்பதன்று. புலன் களை அழித்தால் அவை அறிவற்ற பொருளாகும்.

நாவடக்கம், கையடக்கம் முதலிய வழக்குகளை நோக்குக. இவைகட்கு நாவழிவு கையழிவு என்னும் பொருளையா கொள்வது? நாவடக்கமா யிரு’ கையடக்கமா யிரு’ என்னும் வாசகங்கட்கு முறையே ‘ஒன்றையுந் தின்னாதே’, “ஊமையா யிரு’ என்றும், கையை வெட்டிக்கொள்’, ‘ஒன்றுஞ் செய்யாதே’ என்றும் எவரே பொருள் கூறுவர்? பொருந்திய உணவை உண்’, ‘நல்லனவற்றைப் பேசு’, ‘திருடாதே, ‘நல்லனவற்றைச் செய்’ என்பனவல்லவோ அவ்வாசகங்களின் பொருள்? இவ்வாறே புலனடக்கம்

திருக்குறள் பாயிரம்) விரிவுரை, பக்கம் 45,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/230&oldid=695528" இலிருந்து மீள்விக்கப்பட்டது