பக்கம்:திரு. வி. க.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 223

அறியாமைக் கட்டைப் போக்கவே ஆண்டவ னால் உலகம் அளிக்கப்பட்டது. அதை நீத்தால் அறியாமை எங்ஙனம் அகலும்?

பெண் ஆண் சேர்க்கை, அன்பைப் பெருக்கித் தன்னலக் கட்டை அறுப்பது. அவ்வறவாழ்வை நீத்தால் தன்னலம் எங்ஙனம் அறும்?

மனமாககளை அகற்றுதற்கு உலக வாழ்வும், பெண் ஆண் சேர்க்கையும் இன்றியமையாதன. இது திருவள்ளுவர் உள்ளக் கிடக்கை. இவ்வுள்ளக் கிடக்கை திருக்குறளாகப் பரிணமித்துள்ளது.

மனமாசுகளை நீத்தற் பொருட்டு ஒழுக்கத்தில் நிற்கவேண்டுமேயன்றி உலகையும் பெண்ணையும் நீத்தலாகாது. உலகையும் பெண்ணையும் துறந்த தனி வாழ்வு, மக்களைத் தீயொழுக்கத்திற் செலுத்தும். உலக வாழ்வும், பெண்ணோடு வாழ்தலும் மக்களை நல்லொழுக்கத் துறையில் தண்ணச் செய்யும். இது குறித்துக் கூறுவது திருவள்ளுவர் நூல்’ இதே முறையில் நம்மாழ்வாருடைய பாடல் ஒன்ற னுக்கும், தேவாரப் பாடல் ஒன்றனுக்கும், தாயுமானார் பாடல் ஒன்றனுக்கும் விரிவுரை செய்துள்ளார் பெரியார். வேறு எந்தத் துறையிலும் செல்லாமல் உரையாசிரியராக மட்டுமே திரு.வி.க. இருந்திருப்பினும் அழியா இடம் ஒன்றைத் தமிழிலக்கிய உலகில் தமக்கெனத் தேடிக் கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.

மொழிபெயர்ப்பு

இறுதியாகப் பெரியார் செய்துள்ள மற்றொரு தொண்டையும் கூறி முடிக்க விரும்புகின்றேன். அதுவே

  • திருக்குறள் (பாயிரம்) விரிவுரை, பக்கம் 240, 241.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/233&oldid=695531" இலிருந்து மீள்விக்கப்பட்டது