பக்கம்:திரு. வி. க.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 27

ஆதலால், வாழ்வின் ஒவ்வொரு கூறிலும் சுதேசியம் மருவல் வேண்டும்.”*

இதனைப் படிப்போர் இதனை மொழிபெயர்ப்பு என்று கூறத் துணியார். இதிலிருந்து பெரியாரின் தமிழாக்கத் திறனை ஒருவாறு அறிந்துகொள்ள முடிகிறது.

கல்லாத கலையே இல்லை

சுருங்கக் கூறுமிடத்து, இப் பெரியாரின் எழுத்துகளைப் படிக்குமிடத்து வேதம் உபநிடதத்திலிருந்து, சிவஞான போதம். சித்தியார் என்பவற்றிலிருந்து,டார்வின் கொள்கை. அனுபற்றிய விஞ்ஞானம். டாக்டர் மார்ஷல் பொருளா தாரத் தத்துவம் முதலியவற்றிலிருந்து கார்ல் மார்க்ஸ் தத்துவம்வரை இப்பெரியார் கல்லாத கலையே இல்லை என்பது இவர் சொல்லாலே தோன்றி நிற்கின்றது. ஆனால், அன்று இத்துணைக் கற்றிருந்த அனுமனைக் கண்டு யார் இச்சொல்லின் செல்வன்? என்று வினவுதற்கு ஓர் இராமன் இருந்தான். இன்றோ இத் துரதிட்டம் பிடித்த தமிழ்நாட்டில் தோன்றிய இப்பெரியாரைச் சொல்லின் செல்வர் என்று அழைக்காவிட்டாலும், அவருடைய பெருமையை அறிந்து போற்றுதற்குக்கூட நாதி இல்லாமற் போய்விட்டது. இன்னஞ் சில ஆண்டுகள் கழிந்தால் திரு.வி.க.வை யாரென்று கூட அறிந்துகொள்ளாமற் போகும் நிலை ஏற்படலாம். அவ்வாறு ஏற்பட்டாலும் அதில் வியப்படைய ஒன்றும் இல்லை. யான் எழுதிய ஒரு சிறு நூலுக்கு அணிந்துரை தந்த பெரியார், ஐயோ! தமிழ்நாடே! உனக்கு ஓர் ஐயோ!’ என்று எழுதினார். அதனைத்தான் மீட்டும் ஒரு முறை சொல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

  • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பக்கம் 394, 395,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/237&oldid=695535" இலிருந்து மீள்விக்கப்பட்டது