பக்கம்:திரு. வி. க.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 229

கருத்துக்கள், சிந்தனைகள், சமரச ஞானம் என்பவை இன்றும் இருக்கின்றன. இவற்றிற்குச் சாவேது? திரு.வி.க. என்ற மனிதரை இக் கருத்துகளிலிருந்து தனியே பிரித்தல் இயலாத காரியம். ஏனையவர்களைப் பொறுத்தமட்டில் கருத்து களையும் மனிதர்களையும் பிரித்து விடலாம். காரணம், அவர்கள் இக் கருத்துகளைக் கூறினார்கள். பிரசாரம் செய்தார்கள், எழுதினார்கள் என்பது தவிர வேறு இல்லை. அவர்களே கருத்துகளாக மாறினார்கள் என்று கூறிவிட முடியாது. எனவே, கருத்துகள் வேறாகவும் அதனைக் கூறுகின்ற அவர்கள் வேறாகவும் இருந்தார்கள். அத்தகைய மனிதர்கள் காலமாகும் பொழுது அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறுவது முற்றிலும் பொருத்தமே.

கருத்தும் மனிதரும் ஒன்றே

ஆனால், திரு.வி.க. என்ற மனிதர் இந்தச் சமரசம் என்ற கொள்கையைப் பிறருக்கு எடுத்துக் கூறுவதோடு நிற்கவில்லை. குறிப்பிட்ட சமயத்தார்கள் தங்களுடை யவர்கள் என்று போற்றி வழிபடும் ஞானசம்பந்தர், நம்மாழ்வார் என்ற பெரியார்களிலிருந்து திருவள்ளுவர்வரை அனைவரிடமும் காணப்பெறும் சமரசரத்தைக் கண்டெ டுத்துக் கூறிய திரு.வி.க, தாம் வேறு தாம் கூறும் கருத்துக்கள் வேறு என்றில்லாமல் தாமே கருத்துகளாய் மாறிவிட்டார். அவருடைய வாழ்வு முழுவதும் சமரச ஞானியாய் வாழ்ந்தார். புறத்துறவை வெறுத்து அகத்துறவை வற்புறுத்திய அவர், நீத்தார் பெருமை என்பது அகத்துறவுடையாரை என்று அஞ்சாமல் எழுதிய அவர், இல்லற ஞானியாய், இராயப்பேட்டையில் வாழ்ந்த தவமுனிவராய்த் திகழ்ந்தார். காட்டில் வாழும் முனிவர்கள் தாம் தாம் வீடுபேறு அடையந் தவ முயல்கின்றனர். ஆனால், மீட்டும் மீட்டும் தமிழ் நாட்டில் வந்து பிறந்து என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற தாரக மந்திரப்படி, தாம் என்ஹ நினைவற்று மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/239&oldid=695537" இலிருந்து மீள்விக்கப்பட்டது