பக்கம்:திரு. வி. க.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அச. ஞானசம்பந்தன்

எத்தகையவர்?

திரு. வி.க. என்ற மனிதர் எத்தகையவர்: கல்வியாலும், நாட்டுப் பற்றாலும், தொண்டுள்ளத்தாலும் மிகப் பெரியவ ராக விளங்கினார் அப் பெரியார். இதன் மேலும் வேறு என்ன வேண்டும் என்று பலரும் நினைக்கலாம். இவை அனைத்தும் இருந்துங்கூட அவ்விடத்தே மனிதத்தன்மை இல்லாமல் இருக்கலாம். அவ்வாறாயின் மனிதத்தன்மை என்பது யாது? பிற உயிர்களை ஒருவன் எவ்வளவு துரம் அன்பினால் அணைக்கிறானோ, அவ்வளவு தூரம் மனிதத் தன்மையில் மேம்படுகிறான். கம்பநாடன் கண்ட இராமனிடம் வீரம் முதலியன மேம்பட்டிருந்தன. ஆனால், அவை அனைத்தையும்விட மனிதத்தன்மை மிக்கிருந்ததைக் கவிச்சக்கரவர்த்தி பாரதியார் காண்கிறார். ‘Humanism என்ற ஆங்கிலப் பதத்திற்கு நேர் சொல்லாக மானிடம் அல்லது ‘மனிதத் தன்மை என்பதைக் கூறலாம். மானிடத் தன்மையை இராமன்மாட்டு ஏற்றி அவனைத் தெய்வத் தன்மை உடையவனாக ஆக்கிய பெருமை கம்பனைச் சாரும். இதனை நன்குணர்ந்த பாரதியார் கம்பனைப்பற்றிக் கூற வேண்டிய இடத்தில் கம்பன் ஒரு மானிடன் வாழ்ந்ததும், காளிதாசன் கவிதை புனைந்ததும் என்று கூறினார். கம்பநாடனுக்கு “மானிடன் என்ற பட்டப் பெயரே முற்றிலும் பொருந்தும் எனக் கண்டார், நம் காலத்தில் வாழ்ந்த கவியரசர்.

மானிடம் நிறைந்தவர்

இத்தகைய மானிடம் அல்லது மனிதத் தன்மை’ யாரிடம் நிறைந்துள்ளதோ அவர்களையே பெரியார் என்று உலகம் போற்றுகிறது. இந்த இயல்பைத் தம் மாட்டுப் பெற்றவரிடம், கல்வி முதலிய வேறு சிறப்புகள் இருக்கின் றனவா என்று உலகம் எதிர்பார்ப்பதில்லை. இயேசுநாதர் போன்ற பெருமக்களிடம் கல்வி போன்ற சிறப்புகள் இல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/24&oldid=695538" இலிருந்து மீள்விக்கப்பட்டது