பக்கம்:திரு. வி. க.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 17

“பித்தாய் இவ் விலங்கின் ஒழுக்கினைப் பேசலாமோ “என்று பேசும்பொழுது, அவற்றின் தாழ்ந்த இயல்பை இராமபிரான் நன்கு அறிந்துள்ளான் என்பதையும் அறிகிறோம். என்றாலும், அவற்றைத் தன் உடன்பிறப்பாகக் கொண்டு அவ்வாறே நடத்துவதையும் தவறாகக் கருதவில்லை அப் பெரியோன்.

மானிடத்தின் வெளிப்பாடு

இத்தகைய மனநிலையை யார் பெற்றிருப்பினும் அவர்களை மானிடத் தன்மை நிரம்பியவர்கள் என்றே கூறுகிறோம். இராமலிங்க வள்ளலார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடுவதை நாம் அறிவோம். ஒரறிவுயிராகிய பயிர் வாடுவது கண்டு உளம் வருந்தும் ஒருவர் எத்தகையவராக இருத்தல் கூடும்? உறுதியாக அவர் மானிடத் தன்மை நிரம்பியவராகவே இருத்தல் வேண்டும். இதே மனநிலை காரணமாகத்தான் அப் பெரியார் கொலையையும் ஊன் உண்பதையும் வெறுத்து, கண்டித்து ஒதுக்கியுள்ளார். பிம்பிசாரனுடைய வேள்விக்கு ஒட்டிச் செல்லப்படும் ஆட்டுக் குட்டியின்பால் எல்லையற்ற இரக்கங்கொண்டு அவ் ஆட்டிற்குப் பதிலாகத் தன்னையே பலி இடலாம் என்று புத்ததேவன் வாதாடிய பொழுது அப் பெருமானிடம் நிறைந்துள்ள இந்த மானிடத் தன்மையைத் தான் காண்கிறோம். யாரோடும் பகை கொள்ளாதவர்

பிற உயிர்களைத் தன் உயிர்போல் அன்பு செய்வதே மானிடத் தன்மை என்றால் திரு. வி.க. ஒரு மானிடராகவே வாழ்ந்தார். அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் ஒர் உண்மையை அறிந்திருப்பர். யாரையும் அவர் வெறுத்த தில்லை; யாருடனும் காழ்ப்போ பகையோ கொண்டது மில்லை. முன்பின் அறிமுகம் இல்லாதவர் மாட்டும் அவர்

1. கம்பன் 3977

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/27&oldid=695542" இலிருந்து மீள்விக்கப்பட்டது