பக்கம்:திரு. வி. க.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 இ அச. ஞானசம்பந்தன்

நிற்கும் பொதுமை அறத்துக்குரிய சன்மார்க்கத் தொண்டு செய்தல் வேண்டும். இதுவே எனது வேண்டுதல்.” t

இருதலைக் கொள்ளி

இந்த எண்ணம் நாளாவட்டத்தில் வளர்ந்து முழு ஆட்சி பெற்றுவிட்டது. தம்மால் அன்பு செலுத்தப் பெறும் ஒருவர் (கதிரைவேலனார்) வழக்குமன்றத்தில் இழுக்கப் பட்டார். அவருக்குத் தம்முடைய சான்று இன்றியமையாதது எனக் கண்டார் பள்ளி மாணவராகிய திரு. வி.க. ஆனால், சான்று கூறப்போனால் தேர்வு எழுத முடியாது என்பதும் தெரியும். இரண்டில் எதனை மேற்கொண்டாலும் மற்றொன்றை இழக்க நேரிடும். வறுமையில் உழன்ற ஒரு குடும்பத்தில் மகன் மெட்ரிகுலேஷன் தேர்வு பெறுவது ஒரு பெரிய வரப்பிரசாதமாகக் கருதப்பெற்ற காலம் அது. அந்நிலையிலும் இவ்விரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தே ஒரு முடிவுக்கு வந்தார் திரு. வி.க.

“விசாரணை நாள். தேர்தல் சோதனையின் முதல் நாள் ! என் செய்வேன்! என் சோதனை பெரிதாயிற்று. சான்றுக்குச் செல்வதா!! பரீட்சைக்குப் போவதா? இரண்டும் மாறிமாறி என்னை வாட்டின. ஒரு பக்கம் கதிரைவேல்; இன்னொரு பக்கம் வாழ்வு. கதிரைவேல் அன்பே விஞ்சியது. பெரிய தந்தையார் மைந்தரால் பலவிதத் தடைகள் கிளத்தப்பட்டன. தந்தையார் ஒன்றுஞ் சொல்லவில்லை. பள்ளி வாழ்வு வேறு வாழ்வாக மாறும் காலம் வந்தது. அதைத் தடுத்தல் எவரால் இயலும்? யான் சான்றுக்குச் செல்ல உறுதி கொண்டேன்”

1. திரு. வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/32&oldid=695548" இலிருந்து மீள்விக்கப்பட்டது