பக்கம்:திரு. வி. க.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 23

என்று எழுதும் பள்ளி மாணவன் திரு. வி.க. தியாகி திரு. வி.க. வாக உருவெடுத்தலின் முதற் படியாகும் இது. - பல்லோர் நட்பு

இத்தகைய தொண்டுள்ளம் நாளாவட்டத்தில் விரியத் தொடங்கியது. சமயத் தொடர்பாக அவர் எழுதிய நூல்களி லெல்லாம் அவருடைய தொண்டு மனப்பான்மையைக் காண முடிகிறது. அவ்வாறு எழுதும் மனப்பான்மையைத் திரு. வி.க. யாண்டுப் பெற்றார் என்று ஆய வேண்டியது நம் கடமை. இப் பெரியாரின் இளமையில் இவருடன் தொடர்பு கொண்டவர்கள் பல திறத்தவராவர். கதிரைவேற் பிள்ளை, மயிலைத் தணிகாசல முதலியார், மறைமலையடிகள் ஆகிய சைவ சித்தாந்திகள் ஒருபுறம், சிவப்பிரகாச சுவாமிகள் போன்ற அத்வைதிகள் ஒருபுறம், சக்கரவர்த்தி நயினார் போன்ற சைனர்கள் ஒருபுறம், சிங்கார வேல் செட்டியார் போன்ற பெளத்த சமயவாதிகள் ஒருபுறம், இரத்தினம் பிள்ளை போன்ற கிறிஸ்தவ நண்பர்கள் ஒருபுறம் என இத்திறத்த பல சமயவாதிகளுடனும் தொடர்பு கொண்டி ருந்தார். பெரும்பாலும் மனித இயல்பு ஏதாவதொரு கூட்டினுள் அடைபட்டவுடன், உண்மை என்பது அக் கூட்டைத் தவிர வேறு யாண்டும் இல்லை என்றுதான் நினையும். முற்றிலும் மாறுபட்ட இத்தகையவர்களுடன் பழகிய திரு. வி.க. பொறுமை, சகிப்புத்தன்மை, பிறரிடமும் உண்மை உண்டு என்று ஏற்றுக்கொள்ளும் பண்பு ஆகிய வற்றை நிரம்பப் பெற்றுவிட்டார். தம்மை இழக்கவில்லை

தொண்டுள்ளங் கொண்டவருக்கு மேலே கூறிய இப் பண்புகள் மிக இன்றியமையாதவை. இதனிடையே நீதிவான் சதாசிவ ஐயர், அன்னிபெசன்ட் அம்மையார் ஆகியவர்கள் தொடர்பால் தியாசாஃபிகல் கழகத்தின் தொடர்பும் பெற்றார். சாதாரண மனிதனிடம் இத்துணை மாறுபட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/33&oldid=695549" இலிருந்து மீள்விக்கப்பட்டது