பக்கம்:திரு. வி. க.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. 27

சொல்லும்; பல திறக் கொடிகள் தங்கள் நிலைகளைத் தெரிவிக்கும்.

சோலையில் புகுவேன். மரங்கள் கூப்பிடும்; விருந்து வைக்கும். ஆலமர நிழலில் அமர்வேன். ஆல், ‘என் விழுதைப் பார். அந்த அரசுக்கு இஃது உண்டா’ என்னும். அரசு கண்ணிற் படும். ‘யான் விழுதின்றி வானுற ஓங்கி நிற்கிறேன். என்னை மக்கள் சுற்றிச் செல்கிறார்கள். காண்’ என்னும். வேம்பு என் நிழல் நலஞ் செய்யும். என் பூவின் குணங்களைச் சொல்கிறேன், வா!’ என்னும். அத்தி, நாகை, விளா, மா, வில்வம் முதலிய மரங்கள் விளியாமலிருக்குமோ? சிந்தனையில் அவற்றின் நுட்பங்கள் விளங்கும்.

மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது இவர்வேன்; ஓரிடத்தில் அமர்வேன். மேலுங் கீழும் பார்ப்பேன்; சுற்று முற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும். அமைதி பொருந்திய மனத்துடன் மலையை நோக்குவேன். என் அருமை மலையே! உன்னை அடைந்ததும் மனம் அமைதியுறுவானேன்? உன் வரலாறென்னை? நீ எப்படி அமைந்தாய்? மக்கள் முதன் முதல் உன்னிடத்திலா தோன்றினார்கள்? உன்னிடத்தில் எப்படி அருவிகள் அணைந்தன? வண்டுகள் சூழ்ந்தன? மயில்கள் வந்தன? குயில்கள் கூடின? நீ இசை அரங்கா? மக்கள் உன்னை நாடி வருவானேன்? உன்னிடம் வந்து உலவுங் காற்று ஏதேனும் தனி இயல்பு பெறுகிறதா? உன் மீது பொழியும் ஒளிக்கு ஏதேனும் தனிச் சிறப்புண்டா? என்று கேட்பேன். மலை எளிதில் வாய் திறக்குமோ? மலையை முன்னமுன்ன வாய்மை தவழும்.”

1. திரு. வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் 19-122

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/37&oldid=695553" இலிருந்து மீள்விக்கப்பட்டது