பக்கம்:திரு. வி. க.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 இ. அச. ஞானசம்பந்தன்

சமரசத்தின் ஆணிவேர்

இத்தகைய மனநிலையைப் பெற்றுவிட்ட ஒருவர். யாவும் இறைவன் உறைகின்ற இடம் என்னும் தத்துவத்தை உணர்ந்துவிட்ட ஒருவர் தொண்டுள்ளம் கைவரப் பெறுவதில் வியப்பு ஒன்றுமில்லை. உண்மை யாண்டும் பல்வேறு வடிவுடனும் இலங்கும் என்பதையும், அனைத்தும் இறைவ னுடைய படைப்புகள் தாம் என்பதையும் உணர்ந்த ஒருவர் சமயக் கொள்கையில் சமரச நோக்குடையவராய்த் திகழாமல் வேறு எவ்வாறு இருத்தல் இயலும்? தொண்டுள்ளங் கொள்ள இன்றியமையாது வேண்டப்படும் இயல்புகளுள் அச்ச மின்மை ஒன்றாகும். இளமைதொட்டே அச்சமின்மை அவரிடமிருந்தது என்பதை அவருடைய வாழ்க்கைக் குறிப்புகள்’ என்ற நூலில் காணலாம். அவர் கல்வி யாது?

திரு. வி.க. இளமையிற் பெற்ற இத் தொண்டுள்ளம் நாளும் வலுப்பெற்று வளரலாயிற்று. தாம் பெற்ற கல்வியும் இதற்குத் துணை செய்தது என்று வாழ்க்கைக் குறிப்பில்’ அவரே கூறுகிறார்:

“ஏட்டுக் கல்வி இரு வழியில் அமையும். ஒன்று. நேரே இயற்கையினின்றும் இறங்கி அமைவது; மற்றொன்று இன்னோர் ஏட்டினின்றும் இறங்கி அமைவது. முன்னையது இயற்கைக் கல்வி பெறுதற்குத் துணை போகும் வாய்ப்புடையது. அதை நல்வழியிற் பயன்படுத்தினால் அது தன் கடமையைச் செய்தே தீரும். அக் கல்வியைப் பயன்படுத்தும் விதத்தில் மாறுதல் நேர்ந்தாலும் அதனால் பெருந்தீமை - விளையாது. பின்னையதோ இயற்கைக் கல்வி பெறுவ தற்குத் துணை போதல் அரிது; துணை போகா தொழியினும் தீமை விளைவியாமலிருந்தால் போதும். இக் கல்வி, பொறாமை, பகை, பிணக்கு, சூழ்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/38&oldid=695554" இலிருந்து மீள்விக்கப்பட்டது