பக்கம்:திரு. வி. க.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இத் அச. ஞானசம்பந்தன்

இயற்கையில் பெற்ற கல்வியோடும் இயல்பாய் அமைந்த தொண்டுள்ளத்தோடும் அற்றை நாளில் நிலவி வந்த சமயங்களையும் அவற்றின் உட்கோள்களையும் ஆயத் தொடங்கினார் இவர் நாவுக்கரசர் உண்மை காண வேண்டும் என்ற நோக்குடன் பிற சமய ஆராய்ச்சியில் இறங்கினது போலவே தமிழ் முனிவரும் இறங்கினார். ஆனால், ஒரு வேறுபாடு உண்டு. ‘நல்லாறு தெரிந்துணர்ந்தும் நம்பர் அருளாமையினால் கொல்லாமை மறைந்துறையும் அமண் சமயம் குறுகினார்’ நாவுக்கரசர். திரு. விகவோ எனில் இறைவனருள் பெற்ற பிற சமயங்களை ஆய முற்பட்டார்.

சமயமூலம் உலக ஒற்றுமை

சமய வாழ்வு ஒன்றினால்தான் மனிதகுலம் ஒற்றுமைப் பட முடியும் என்பதை இளமையிலேயே உணர்ந்து விட்டார் இவர். சகோதரநேயம் என்பது தன்னுயிரைப் போல மன்னுயிரைக் கருதும் அன்பாகும். இத்தகைய ஓர் அன்பை நாடு, மொழி, நிறம், இனம், மதம் என்பவை கூட்டா. எனவே, பரந்துபட்ட அன்புக்கு, எல்லையற்ற அன்புக்குக் கட்டற்ற எல்லையற்ற ஒன்றன் தொடர்பு தேவை. வேறு வகையாகக் கூறினால் எங்குமுள்ள இறைவனுடன் தொடர்பு கொண்டவன் பிறருக்குத் தீங்கு செய்ய முற்படான். இத்தகையதொரு புதுமையான கருத்தை 1922ஆம் ஆண்டிலேயே திரு. வி.க. அவர்கள் தமிழ் நாடும் நம்மாழ்வாரும் என்ற நூலில் குறித்துள்ளார். அவர் கூற்றைச் சரியாக விரிவாக எடுத்துக் காட்டிவிட்டு இதில் காணும் புதுமைபற்றி ஆராயலாம்.

“வாழ்வு இருவிதம். ஒன்று நல்வாழ்வு: மற்றொன்று அஃது அல்லாதது. நல்வாழ்வு எது?

1. பெரியபுராணம், திருநாவுக்கரசர் புராணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/40&oldid=695557" இலிருந்து மீள்விக்கப்பட்டது