பக்கம்:திரு. வி. க.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 37

மூர்க்கத் தாலே முடிவும் எய்தும்: ‘வாளை எடுப்பவன் வாளால் மடிவன்’ என்றே கிறிஸ்து நன்றே கூறினர்; மார்க்ஸியம் காந்தியம் தொடக்கம் மாறே இரண்டும் முடிவில் இணையும் ஒன்றாய்; அகிம்சையை இம்சையால் இணைப்பது மார்க்ஸியம்: அகிம்சையை அகிம்சையால் அணைப்பது காந்தியம் இரண்டு மார்க்கமும் திரண்ட மூலம் ஆதி பகவன் போதனை என்க: பொருளின் ஆணவம் அருளையும் ஒட்டிக் கொலைபுலை காமம் களவுபொய் கள்ளே முதலிய பாவம் நிதம்செயத் துரண்டும்; பொருளில் ஆணவம் பொருந்தா வாறு பொருளைத் தேடுக பொருளைத் தேடுக அறவழி நின்று பொருளைத் தேடுக வையம் பொருளே தெய்வம் அருளே மார்க்ஸிஸ் பொருளே காந்தி அருளே ஒன்ற இரண்டும் உழைத்தில் நன்றே.” மார்க்கிஸம் ஏற்படுத்தும் மனவெறுமையில் தீய எண்ணங்கள் குடிபுகல் இயல்பு. புறத்தை சமத்துவம் கண்டு அகத்தைப்பற்றிக் கவலைப்படாமல் விட்டு விட்டால், மனிதனிடம் இயல்பாக எழும் பேராசை நாளாவட்டத்தில் கொலை, களவு என்பவற்றையெல்லாம் புகுத்திவிடும். எனவே, மனத்தை ஒழுங்குபடுத்தும் காந்தியத்தை மார்க்கி ஸத்துடன் இணைக்கிறார் திரு. வி.க. மிகுபொருள் விரும்பா மேன்மை ஒழுக்கம் பொருளின் நிலைக்கும் அருளின் நிலைக்கும் உள்ள தொடர்பை அறிவுறுத்தும். மார்க்ஸியத்

1. பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும் காந்தியமும், பக்கம் 43 முதல் 45 வரை வளிகள் 65 முதல் 109 வரை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/47&oldid=695564" இலிருந்து மீள்விக்கப்பட்டது